ஐபிஎல் தொடரில் இருந்து மிக முக்கிய நபர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியில் இருந்து மிக முக்கிய நபர் விலகியுள்ள தகவல் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தின் முடிவில் சுமார் 204 வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக ரூ.551 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.  அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் … Read more

சுவிட்சர்லாந்தில் இனி இதற்கு கூடுதல் கட்டணம் வசூல்!

சுவிட்சர்லாந்தில் இனிவரும் நாட்களில் ரீப்ளே டிவிக்கு (replay TV) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ரீப்ளே டிவி என்பது நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, பயனர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அவற்றைப் பார்க்க அனுமதிக்கிறது, அதிலும் சப்ஸ்கிரைபர்களிடமிருந்து எந்தஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த ரீப்ளே டிவியில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது பார்வையாளர்களை நிகழ்ச்சிக்கு இடையே வரும் விளம்பரங்களை வேகமாக ஓட்டிவிட்டு இகழச்சியை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது. இது ஒளிபரப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் … Read more

உக்ரைன் நகரை உலுக்கிய கார் வெடிகுண்டு தாக்குதல்! மக்கள் வெளியேற்றம்.. ரஷ்யாவின் சதித்திட்டம்?

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள Donetsk நகரத்தில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதலின் தொடக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரஷ்ய படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரங்களான Donetsk மற்றும் Luhansk-ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு, அதனை ஆளும் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டனர். மக்களை அங்கிருந்து வெளியேறி எல்லையைக் கடந்து ரஷ்யாவிற்குள் நுழையுமாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், … Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும்: ஐ.நா. எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார். ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் பிரச்னை விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்னை போராக மாறினால், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார். உக்ரைனைச் சுற்றி ரஷ்ய படைகள் குவிந்துள்ளதால், அதிகரித்த பதட்டங்கள் மற்றும் ஐரோப்பாவில் … Read more

பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு: வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!

அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார். ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய பணம் சேர்ந்ததும் அவர் … Read more

தினம் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க! பல நன்மைளை வாரி வழங்கும்

ஆரஞ்சு பழம் தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றது. ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.  அந்தவகையில் தற்போது ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை … Read more

சொகுசுக் கப்பலின் 10ஆவது தளத்திலிருந்து கடலில் குதித்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியாகியுள்ள வீடியோ

மெகிச்கோ வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுக்கப்பல் ஒன்றிலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர் மாயமான சம்பவம் தொடர்பில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. Carnival Valor என்னும் சொகுசுக்கப்பலில் 2,980 பயணிகளும், 1,180 பணியாளர்களும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை New Orleans என்ற இடத்திலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல் மெக்சிகோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. அந்தக் கப்பல் புதன்கிழமையன்று மெக்சிகோ வளைகுடா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கப்பலில் பயணித்த ஒரு 32 வயது பெண் சுடுதண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கும் … Read more

ஜேர்மனியில் விரைவாக நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்காக சில வழிமுறைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஜேர்மனியில் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு மக்கள் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில், அதை விரைவாக பெறுவதற்கான வழிமுறைகள் சில உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலில், நிரந்தர வாழிட உரிமம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்… Settlement permit என்றும் அழைக்கப்படும் இந்த நிரந்தர வாழிட உரிமம் ( permanent residency), தடையின்றி ஜேர்மனியில் வாழ உதவும் உரிமையாகும். விசாக்களைப் போல இதற்கு காலாவதி திகதி கிடையாது, அதைப்பெறுவதற்கு ஒருவர் … Read more

38 பேருக்கு மரண தண்டனை! அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜூலை 26, 2008 அன்று, அகமதாபாத்தில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜூலை 26, 2008 அன்று நடந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற குழு பொறுப்பேற்றது. இதனிடையே, இந்த மாத … Read more

மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது… வெளிவரும் பகீர் பின்னணி

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து … Read more