சென்னையில் ஜூன் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூடி கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அ.தி.மு.க. மேலிடம் தேர்தல் கமிஷனில் கால அவகாசம் கேட்டு இருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி … Read more

காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல் இன்று பா.ஜனதாவில் இணைந்தார்

அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அவர் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அவர் அந்த கட்சியில் சேர்ந்தார். முன்னதாக ஹர்திக் படேல் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க போகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன். ஒரு சிறிய சிப்பாயாக பணியாற்றுவேன். இவ்வாறு … Read more

புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு?

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் இதில் உள்ளன. இதற்கான கட்டுமானத்தை இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ந் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் என்று … Read more

காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஆரேமோகனாபாராவில் உள்ள ஒரு வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை இவர் வழக்கம்போல் வங்கியில் பணியில் இருந்தார். அப்போது வங்கிக்குள் நுழைந்த பயங்கரவாத கும்பல் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் விஜயகுமாரை நோக்கி சரமாரியாக சுட்டது. இதில் குண்டு பாய்ந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக … Read more

லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்க அதிபரை சந்திக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர்

02.06.2022 10.26: ரஷிய, உக்ரைன் போர் 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயுதம், நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த போரில் ரஷியாவிற்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கவுள்ளார். 04.50: ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் … Read more

“எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனே நிறுத்த வேண்டும்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2021-22-ம் கல்வி ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1.6.2022 மற்றும் 2.6.2022 ஆகிய இரு நாட்கள் “எண்ணும் எழுத்தும்” பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6.6.2022 முதல் 10.6.2022 முடிய “எண்ணும் எழுத்தும்” பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி … Read more

இதுதான் தன்னம்பிக்கை- ஒற்றை காலுடன் தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்

தற்போதைய நவநாகரீக உலகில் பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனங்களை தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஒற்றை காலுடன் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அவரது பெயர் பர்வேஷ் அகமது. காஷ்மீர் குப்வாரா மாவட்டம் மாவர் பகுதியை சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் நடந்த விபத்தில் இவர் இடதுகாலை இழந்தார். அவரது … Read more

கடுமையான பஞ்சத்தை நோக்கி செல்லும் இலங்கை…

கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் கடனுதவி வழங்கி வருகின்றன. ஆனாலும் நாட்டின் இன்னல்களுக்கு விடை தெரியவில்லை. மக்களின் துயரங்களும் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி மீண்டும் விசாரணை அறிக்கை தாக்கல்

திருச்சி: தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை கட்டு கம்பியால் கட்டி திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

பெங்களூருக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.28 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பெங்களூரு: ஆந்திராவில் இருந்து பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கட்டிகேனஹள்ளி என்ற கிராமத்திற்கு சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக கம்மகொண்டனஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒசக்கோட்டையில் இருந்து கட்டிகேனஹள்ளி செல்லும் சாலையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்திய போது காய்கறி பெட்டிகள் இருந்தன. ஆனாலும் வனத்துறையினர் மோப்ப நாய் … Read more