நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழக, புதுச்சேரி மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள்  வெளியிடப் பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.  மேலும், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான … Read more

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்- நிதியமைச்சர் புதிய விளக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது.   தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் … Read more

சென்னை ஆழ்வார்பேட்டை சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக் தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் பைக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தபோதே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அருண் ராமலிக்கம் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்துவிட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பைக் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த … Read more

தேசிய கல்வி மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு அரசு

சென்னை: மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் கல்வி மாநாடு நடைபெறுகிறது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுகிறது. தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. மாநாட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, உயர்கல்வித் துறை … Read more

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன் உள்ளிட்ட வீராங்கணைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியாவின் குத்துச்சண்டை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் சமீபத்தில் இஸ்தான்புல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சக வீரர்களான மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ப்ளைவெயில் (52 கிலோ) பிரிவில் நிகத் தங்கம் வென்றார். மனிஷா மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் முறையே 57 கிலோ மற்றும் 63 கிலோ பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர். வீராங்கணைகள் பிரதமர் மோடியுடன் புகைப்படங்கள் எடுத்துக் … Read more

இவையெல்லாம் மிக முக்கியம்… அதிகாரிகளுக்கு அடுக்கடுக்கான உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், துறைச் செயலாளர்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவதை இந்த ஆய்வின் மூலம் காண முடிந்தது. அதே சமயம், ஒரு சில துறைகளில், சில குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதத்தினை சரிசெய்து, அவற்றின் செயல்பாட்டினை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய ஆய்வின் மூலமாக அறிய முடிந்தது.  அவை தொடர்பாக நீங்கள் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். நான் … Read more

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கிக் கணக்குகள் முடக்கம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.68.62 லட்சம் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், பணமோசடி வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையும் படியுங்கள்.. பிசிசிஐ தலைவர் … Read more

மதுரை பால்வளத்துறை துணை ஆணையர் சஸ்பெண்ட்

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் சிறிஸ்துதாஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடியும் வரை ஓய்வுபெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதையும் படியுங்கள்.. 133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு

தமிழகத்தில் 100ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98-ல் இருந்து 139-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 46-ல் இருந்து 58-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிக்சை பெறுவோர் எண்ணிக்கை … Read more

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல் ?

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- 1992-ம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முக்கியமாக, உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்று, மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு … Read more