தடையை மீறி பா.ஜனதா பேரணி- தலைமை செயலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

சென்னை: தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு எழும்பூரில் திரண்டனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கூடிய பா.ஜனதாவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அவர்கள் கோட்டை நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திரண்டு அங்கிருந்து கோட்டை … Read more

2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்பு- மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் உள்ளன.  இந்தியாவில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  … Read more

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு

காத்மாண்டு: நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் … Read more

தெண்டுல்கரின் ஐ.பி.எல். அணியில் ரோகித், கோலிக்கு இடமில்லை

மும்பை: கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளார். சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவனில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி ஆகியோருக்கு இடமில்லை. இருவரது ஆட்டமும் இந்த ஐ.பி.எல். போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்யவில்லை. விராட்கோலி 341 ரன் எடுத்து இருந்தார். சராசரி 22.73 ஆகும். ரோகித் சர்மாவின் சராசரி 19.14 ஆக இருந்தது. … Read more

உறவினர்களால் கடத்தி செல்லப்பட்ட லெஸ்பியன் தோழியை மீட்டு தரக்கேட்டு இளம்பெண் புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். ஆதிலா நஸ்ரினின் பெற்றோர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரினும் அங்கேயே தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். அப்போது இவருடன் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒன்றாக படித்தார். இதில் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இந்த நெருக்கம் அதிகமாகி அவர்களுக்கு இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டது. தோழிகளின் உறவை தெரிந்து கொண்ட பெற்றோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு … Read more

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய்- உலக சுகாதார அமைப்பு

லண்டன்: கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் … Read more

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை, தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இது போன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், … Read more

கோமா நிலையில் இல்லை- நித்யானந்தா புதிய பதிவு

புதுடெல்லி: குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும்  வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட … Read more

காளையார்கோவில் அருகே ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர். மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். … Read more

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே … Read more