பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பின்னணிப் பாடகர்

கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). இவர் மலையாள இசையுலகில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழாவில் ப்ளூ டயமண்ட் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எடவா பஷீர் மேடையில் பாடல்களை பாடினார். எடவா பஷீர் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், எடவா பஷீரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, எடவா பஷீர் சிகிச்சைப் பலனின்றி … Read more

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

கொழும்பு, மே. 29- இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் நிலையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த மாதம் 9-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர். அதிபர் மாளிகை முன்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகி விட்ட நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்து விட்டார். … Read more

தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 13 கோடி ரூபாய் – 100 பேரின் வங்கிக்கணக்குகளை முடக்கியது எச்.டி.எப்.சி.

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனே குறிப்பிட்ட 100 வங்கிக் கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியதே குளறுபடிக்கு காரணம் என தகவல் தெரியவந்துள்ளது.  வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில … Read more

வழக்கம்போல் பயன்படுத்தலாம்… ஆதார் அறிவுறுத்தலை திரும்ப பெற்றது மத்திய அரசு

புதுடெல்லி: ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.  “ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. எனவே, தனியார் நிறுவனம் உங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என்று கூறினாலோ, அல்லது உங்கள் ஆதார் … Read more

நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் … Read more

அரசு விரைவு பஸ்களில் குப்பை கிடந்தால் வாட்ஸ்அப்பில் புகார் செய்யலாம்

சென்னை: அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1000 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. நீண்டதூரம் செல்லக்கூடிய பயணிகள் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். 400-க்கும் மேல் குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுவாக அரசு விரைவு பஸ்கள் கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால் மக்கள் பயணம் செய்ய முன்வருவது இல்லை. தற்போது தனியார் பஸ்களுக்கு இணையாக சொகுசு … Read more

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் – சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள். இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் … Read more

மெக்சிகோ- அயர்லாந்திலும் குரங்கம்மை பரவியது

மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 2 நாடுகளுக்கு குரங்கம்மை பரவி உள்ளது. மெக்சிகோவில் முதன் முதலாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சென்று வந்திருந்தார். அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் … Read more

அரக்கோணம் மார்க்கத்தில் 31, 1-ந்தேதி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை: பயணிகள் பாதுகாப்பு கருதி அரக்கோணம் யார்டில் வருகிற 31 மற்றும் 1-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 5 ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு … Read more

ஆதார் கார்டு நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்- மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதில், கூறியிருப்பதாவது:- ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், அதை ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம்  வழங்க வேண்டாம்.  ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. … Read more