மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

சென்னை: பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி … Read more

வட மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் புதிய திட்டம்

புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது என்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாட்கள் நடந்த சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அரசியல் விவகாரக்குழு உள்பட 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுபடி இந்த குழுக்களை சோனியா நியமித்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பல்வேறு வியூகங்கள் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்துத்துவா, இந்தி … Read more

மக்கள் பிரச்சினைகளை அறிய மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்- அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தி.நகரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், ஆலோசனை வழங்கினார். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி மற்றும் கட்சியின் துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றி ஆலோசித்தனர். முன்னதாக டாக்டர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:- தலைவராக பொறுப்பேற்றதையொட்டி மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்துள்ளேன். … Read more

கணவர் வீட்டுக்கு போகச் சொன்னதால் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த ஈதுல குண்டா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கல்யாணி (வயது 28). கல்யாணிக்கும் மோகனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு முனி மேதான்ஸ் என்ற 3 வயது மகன் இருந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்யாணி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளஹஸ்தியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். மனைவியையும், … Read more

தமிழகத்தில் குரங்கம்மை நோயை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி- ராதாகிருஷ்ணன்

திருச்சி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருண்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு படுக்கையும் தலா ரூ.2.90 லட்சம் மதிப்பில் என மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளதை பார்வையிட்டார். மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 … Read more

கேரளாவில் 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கியது தென்மேற்கு பருவமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கியது.  அதன்பின்னர் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் தென்படாததால், 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை … Read more

மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் அதிக மழை பொழிவு கிடைக்கும். தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும். தென்மேற்கு பருவ மழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வேகமாக வீசுவதால் இன்று அல்லது நாளை பருவ மழை … Read more

4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்

நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. நேபாளத்தில் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து  ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் படியுங்கள்.. திருப்பதியில் 24 மணி நேரமாகியும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதியில் 24 மணி நேரமாகியும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் 31 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் விடிய விடிய தரிசனத்திற்காக … Read more

அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து லாரி மீது மோதி 7 பேர் உயிரிழப்பு

பஹ்ரைச்- லக்கீம்பூர் நெடுஞ்சாலையில் இன்று கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோதிபூர் பகுதுியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் போலீசார் … Read more