உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகம்: பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை

கிவ், மே. 29- உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற … Read more

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்- சுற்றுலா பயணிகள் அச்சம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் கடல் சூழ்ந்த ராமேசுவரத்தில் ராமர் சிவபூஜை செய்ததாக ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திலும் புனித நீராட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். கடந்த சில மாதங்களாக ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்று) … Read more

மணிப்பூர் கக்சிங் பகுதியில் தீவிரவாதி கைது

மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அசாம் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையின் குழு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணைக்காக ஹியாங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதையும் படியுங்கள்.. இந்தியா-வங்காளதேசம் இடையே … Read more

கேரளாவில் 1-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி பகுதிகளில் நாளை (30-ந்தேதி)யும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் 31-ந் தேதியும், ஜூன் 1-ந்தேதி ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் … Read more

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது எப்படி?

தருமபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி வனஜா (வயது27). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்தார். இதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிய சிலர் உதவியை நாடினார். அப்போது ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்டபோது மறுமுனையில் இருந்து பேசிய நபர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே அழைத்தார். தருமபுரியில் அவர்கள் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்று குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்

அகமதாபாத்: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் … Read more

இந்தியா திராவிடர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு சொந்தமானது- அசாதுதீன் ஓவைசி பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: இந்தியா என்னுடையதோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடையதோ, அமித்ஷாவினுடையதோ அல்ல.  இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும்தான். பாஜக – ஆர்.எஸ்.எஸ். ஆகியவை முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை.   ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை விட உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் கிடைக்கின்றன- ஜெலன்ஸ்கி தகவல்

29.5.2022 04.30: உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 01.35: கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ளன. அங்குள்ள லைமன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.  மேலும்  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. … Read more

பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு

பெர்னாம்புகோ: பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  760 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மற்றொரு மாநிலமான அலகோவாஸில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேர் இறந்தனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள … Read more

மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள்.  இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் … Read more