இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில்கள் இயக்கம்

கொல்கத்தா: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா வங்காளதேசம் இடையே மூன்று ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இரு நாடுகளிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே  பயணிகள் ரெயில்கள் மீண்டும் மீண்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா – டாக்கா இடையே,  கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும், கொல்கத்தா – குல்னா  இடையே கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் இன்று மீண்டும் தொடங்குகிறது என்று கிழக்கு … Read more

மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட்- சாம்பியன் பட்டம் வென்றது சூப்பர் நோவாஸ்

புனே: மகளிருக்கான 4-வது சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்று வந்தது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்,  சூப்பர் நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் மோதின.  டாஸ் வென்ற வெலாசிட்டி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.   அந்த அணியில் அதிகபட்சமாக டாட்டின் 44 … Read more

அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும்- வி.எச்.பி. தகவல்

லக்னோ: பாராளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் பணிகளில், இந்து அமைப்புகள் தீவிர காட்டி வருகின்றன. இந்நிலையில்,  2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விஎச்பி தலைவர் சரத் சர்மா கூறியுள்ளதாவது: ஜூன் 1-ம் தேதி ராமர்கோயில் கருவறை கட்டிடத்திற்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனின் கலாச்சாரத்தை அழிக்கும் ரஷ்யா- பைடன் குற்றச்சாட்டு

28.5.2022 22.00: ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ப்ஸ் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், உக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் வெற்றிபெற மாட்டார் என்றார். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு நேரடியாக போரில் பங்கேற்காது. உக்ரைன் மீது போர் தொடுத்த விஷயத்தில் அதிபர் புதின் அதன் நட்பு நாடுகளின் வலிமையை குறைவாக எடை போட்டுவிட்டார் எங்கள் நோக்கம் இந்தப் போரில் ரஷியா வெற்றிபெறக் கூடாது என்பதே. அவர் வெற்றியும் பெறமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார். … Read more

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் வெற்றி உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது- பில்கேட்ஸ் பாராட்டு

டாவோஸ்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 193 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தகுதி வாய்ந்தவர்களுக்கு போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டம் அடைந்துள்ள வெற்றிக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். டாவோஸ் நகரில்  சுகாதார அமைச்சருடனான … Read more

சினிமாவில் அறிமுகமாகும் மகள்… அதிரடி முடிவெடுத்த குஷ்பு

சினிமா திரையுலகில் நட்சத்திரங்களின் வாரிசுகள் கால் பதித்து வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நட்சத்திர தம்பதியரான இயக்குனர் சுந்தர் சி – நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா  தனது நடிப்பு பயிற்சியை முடித்து விட்டு சினிமா துறையில் களமிறங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.   இது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பதிவில், ‛‛என்னோட மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது … Read more

நைஜீரியாவில் சோகம் – சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என பரவிய தகவலை தொடர்ந்து, சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள் ஆவர்.  இதுதொடர்பாக, மாகாண போலீசின் பெண் செய்தி தொடர்பாளர் இரிங்கே-கோகோ கூறுகையில், … Read more

பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு- பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு

சென்னை: பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி … Read more

ரூ.3500 மதிப்புள்ள 50 கிலோ யூரியாவை ரூ.300க்கு தருகிறோம்- பிரதமர் மோடி

குஜராத்தின் காந்தி நகர் கலோலில் உலகின் முதல் நானோ யூரிவா திரவ ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா மூட்டையின் விலை ரூ.3500 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா மூட்டை ரூ.300க்கு வழங்கப்படுகிறது. 7- 8 ஆண்டுகளுக்கு முன் பெருமளவு யூரியா கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். இதையும் படியுங்கள்.. பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் … Read more

ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக இருந்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்திய அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திகழ்ந்த அவர் மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல்வேறு புதுமைகளுக்கும், மாற்றங்களுக்கும் வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக அவர் பதவி வகித்து உள்ளார். 60 ஆண்டுகள் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். இளம் வயதில் இருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தடவைகளிலும் வெற்றி … Read more