8 ஆண்டு நிறைவு – அனைத்து முதல் மந்திரிகளுடனும் வரும் 31-ம் தேதி பிரதமர் மோடி உரையாடல்

சிம்லா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வரும் 30-ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்திற்குச் செல்கிறார். அவர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து அனைத்து முதல் மந்திரிகளுடனும் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார். இதற்காக இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் இன்று ரிட்ஜ் மைதானத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.  இந்நிலையில், இமாசல பிரதேச முதல் … Read more

மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்- டிஜிசிஏ அதிரடி

ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தையைப் பயணிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ராஞ்சி- ஐதராபாத் விமானத்தில் கடந்த மே 9-ம் தேதி சிறுவன் ஏறுவதற்கு இண்டிகோ நிறுவனத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. சிறுவன் அச்சத்தில் இருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுத்ததாகவும், இதனால் சிறுவனின் பெற்றோரும் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் எனவும் முடிவு செய்ததாக இண்டிகோ நிறுவனம் கூறியது. இந்த சம்பவம் … Read more

சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழையும். 30, 31, 1-ந் தேதியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக் கூடும் … Read more

கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் வெட்கி தலைகுனியும் செயலை நான் செய்யவில்லை- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு, ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் 200 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மருத்துவமனை சவுராஸ்டிராவில் மருத்துவ வசதியை சிறப்பாக்க உதவும். குஜராத் மாநிலத்தில் தற்போது 30 அரசு மருத்துவ கல்லூரிகள் … Read more

தமிழக காங்கிரசுக்கு விஜயதாரணி தலைவர்?- ஜோதிமணியும் தீவிர முயற்சி

ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் ஜோதிமணி இருப்பதால் விஜயதாரணிக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ராஜ்கோட்டில் உள்ள அட்கோட்டில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஸ்ரீ படேல் சேவா சமாஜால் நிர்வகிக்கப்படும் மாதுஸ்ரீ கேடிபி  பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ உபகரணங்களை கிடைக்கச் செய்து, பிராந்திய மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது. மேலும், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் ‘சஹகர் சே சம்ரித்தி’ குறித்த … Read more

இளைய தலைமுறையினருக்கு ரோல் மாடலாக விளங்குபவர் கருணாநிதி: தீர்மானத்தில் பாராட்டு-புகழாரம்

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ‘‘என் உயரம் எனக்குத் தெரியும்” என்று பொது வாழ்வுக்குரிய தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று, நாடே வியந்து பார்க்கும் நல்ல பல சாதனைகளைப் படைத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். 14 வயது சிறுவனாகத் தன் கையில், புலி – வில் – கயல் பொறித்த, என்றும் தாழா தமிழ்க்கொடி ஏந்தி, தாய்மொழியைக் காத்திட சளைக்காமல் போராடி, … Read more

மகள் கற்பழிக்கப்பட்டதற்கு இழப்பீடாக பணம் பெற பேரம் பேசிய பெற்றோர்- வேதனை தாங்காமல் 14 வயது சிறுமி தற்கொலை

ராம்பூர்: உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றொர் மகளை சமாதானப்படுத்தினார்கள். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் … Read more

முல்லைபெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தமிழக அரசு வக்கீல்கள் குழு ஆய்வு

கூடலூர்: முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்டன. அதேபோல் கேரள அரசு, முல்லைபெரியாறு அணை பலமிழந்துவிட்டது என்றும் புதிய அணை கட்டவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்ஆவதற்கு தமிழக அரசின் கூடுதல் தலைைம வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அரசு மூத்த வக்கீல் உமாபதி, … Read more

மாநில கட்சிகளில் முதல் இடத்தை பிடித்தது- தி.மு.க.வுக்கு ரூ.150 கோடி வருமானம்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது வழக்கம். இதன்படி 2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை கட்சிகள் சமர்பித்தன. இதில் 31 பெரிய கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 2020-2021-ம் ஆண்டில் மொத்தம் 149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் … Read more