2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

சென்னை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான். நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் … Read more

திருப்பதியில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலமாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக … Read more

பேத்தியை மானபங்கம் செய்ததாக மருமகள் புகார்- துப்பாக்கியால் சுட்டு முன்னாள் மந்திரி தற்கொலை

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (வயது 59). காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2004-2005-ம் ஆண்டில் என்.டி.திவாரி தலைமையிலான மந்திரி சபையில் மந்திரியாக பதவி வகித்தவர். இவர் மகன் அஜய் பகுகுணாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அவரது மருமகள் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more

காதலனுடன் ஓடிய மகள் கழுத்து அறுத்து கொலை- பெற்றோர் வெறிச்செயல்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் நார்நுர் மண்டலம், நாகலூ குண்டா பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். தம்பதிக்கு 2 மகள்கள் மகன் உள்ளனர். தேவதாசின் இளைய மகள்‌ ராஜேஸ்வரி (வயது 20). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ராஜேஸ்வரியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலிப்பதற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திடீரென வீட்டில் இருந்து … Read more

மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற வியாபாரி

தாம்பரம்: சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). இவர் அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (39). இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9). இவர்களில் நித்யஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், அரிகிருஷ்ணன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். இன்று … Read more

கணித பாடத்தில் மாணவிகளை விட மாணவர்களே பெஸ்ட்- மத்திய அரசு ஆய்வில் தகவல்

புது டெல்லி: தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சி.பி.எஸ்.இ ஆய்வு நடத்தியது.  கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கிராமப்புறம், நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் … Read more

திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16 , 17-ந் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் … Read more

பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர்- சுட்டுக்கொன்ற போலீசார்

ஒட்டாவா: கடந்த மே 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் … Read more

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பான், இந்தியா இன்று பலப்பரீட்சை

ஜகார்த்தா: 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.  8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.  … Read more

நாட்டிற்கு மதவாத அரசியலால் தான் ஆபத்து, குடும்ப அரசியலால் அல்ல: குமாரசாமி

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சுலபமானது அல்ல பிரதமர் மோடி, குடும்ப அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது என்று கூறியுள்ளார். இது அவரது புதிய உபதேசம். நாட்டின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது போல் பேசியிருக்கிறார். காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்ட பிறகு மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகளே சவாலாக திகழ்கின்றன. இந்த கட்சிகளை ஒழித்துக்கட்ட பா.ஜனதா என்ன செய்கிறது … Read more