இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்

கொழும்பு : இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். சட்ட திருத்த மசோதா குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் 21-வது சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் … Read more

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்த இளம்பெண்

லண்டன் : இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (வயது 25). இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்தில் படிக்கும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றிருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார். அவரது 2 வயதில் இருந்து இந்த பழக்கம் ஆரம்பித்து உள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர் … Read more

மாநிலங்களவை தேர்தல்: பீகாரில் லாலு பிரசாத்தின் மகள் வேட்புமனு தாக்கல் செய்தார்

பாட்னா : பீகாரில் இருந்து விரைவில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜனதா, ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகள் தலா 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதள கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி மற்றும் … Read more

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்

நியூயார்க் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோசின் தாய் போதைப்பழக்கத்துக்கு … Read more

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று   சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.  சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் … Read more

அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவு- சென்னையில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை:   நடப்பாண்டு கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது.  அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது. அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வாட்டியது. எனினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் … Read more

லைவ் அப்டேட்ஸ்: நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலனை

28.5.2022 04.10:  ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். 03.10: ரஷியாவிற்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட மற்றும்  நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்க … Read more

தேசிய கல்விக் கொள்கை நமது கடந்த கால பெருமையை மீட்கும்- ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.  நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.  தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம், புதிய மறுமலர்ச்சி ஏற்படும். தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  தேசிய … Read more

லைவ் அப்டேட்ஸ்: வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதற்கு நன்றி- அதிபர் புதின்

 27.5.2022 16.45: உக்ரைனின் டான்பாஸ் மாகாணம் லுகன்ஸ்க் நகரில் உள்ள செவிரொடொனெட்க்ஸ் நகரில் உக்ரைன், ரஷிய படைகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக செவிரொடொனெட்க்ஸ் நகரில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 சதவீத குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளது என நகர மேயர் தெரிவித்துள்ளார். 13.54: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடையை விதித்தன. அந்த நாடுகளின் நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இதற்கு நன்றி தெரிவித்த ரஷிய … Read more

பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம்- இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு, இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  2019-ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த  டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில்  யாசின் மாலிக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தனிப்பட்ட மனித உரிமைகள் ஆணையம் விமர்சனம் செய்திருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு … Read more