மும்பை போதைப்பொருள் வழக்கு – ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு

மும்பை: மும்பை – கோவா சொகுசு கப்பலில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்ததாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6,000 பக்கங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் … Read more

தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் பிரதமர் மோடி- அண்ணாமலை

பிரதமர் மோடி நேற்று சென்னை வந்து ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் சென்னை வருகை பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி வருகை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:- பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள்விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் … Read more

சூறைகாற்றுடன் மழை- திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது. கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி … Read more

அன்புமணி பா.ம.க. தலைவர் ஆகிறார்- நாளை பொதுக்குழுவில் முடிவு

சென்னை: பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) திருவேற்காட்டில் நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த பொதுக்குழுவில் அன்புமணி பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் பா.ம.க.வை தொடங்கினார். சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் வருகிறது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற யெரில் … Read more

சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர்

புதுடெல்லி: கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி … Read more

அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தவர்களே பட்டா பரிமாற்றம் மூலம் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு நிலங்கள் பெருமளவில் கொள்ளைபோக வழிவகுக்கும் வகையில் திமுக அரசால் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வுத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது. மலைப்பகுதி, யானை மற்றும் புலி வழித்தடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இதேபோன்ற ஆக்கிரமிப்பு சிக்கல் வந்தால், அது வனத்துறை மூலம் கையாளப்படும் … Read more

லடாக்கில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7 ராணுவ வீரர்கள் பலி- பலர் காயம்

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்.. சொத்துக் குவிப்பு வழக்கு – அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை

சொத்துக் குவிப்பு வழக்கு – அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை

சண்டிகர்: கடந்த 1993 முதல் 2006-ம் ஆண்டு வரை முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனை … Read more

காளஹஸ்தியில் நிதி நிறுவனத்தில் பெண் கேஷீயரை கட்டிப்போட்டு ரூ.85 லட்சம் நகை கொள்ளை

திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பெரிய மாசி வீதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் திறக்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் காளஹஸ்தியை சேர்ந்த சவந்தி (வயது 36) என்பவர் கேஷியரியராக வேலை செய்து வருகிறார். நேற்று நிதி நிறுவனம் வழக்கம் போல் இயங்கியது. மாலை பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்த ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். சவந்தி மட்டும் இரவு 10 மணி அளவில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். … Read more

‘கோ பேக் மோடி’ கோஷத்தை கையில் எடுக்காதது ஏன்?- துரை வைகோ விளக்கம்

சென்னை: பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:- கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன. ஆனால் இந்த முறை தமிழக மக்கள் … Read more