ட்ரோன்கள் விவசாயத்துறையில் கேம் சேஞ்சராக மாறி வருகிறது- பிரதமர் மோடி

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹாத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு ட்ரோன் செயல் விளக்கங்கள், 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- தொழில்நுட்பத்தால் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. மண் சுகாதார அட்டைகள், இ-நாம் அல்லது ட்ரோன்கள் எதுவாக … Read more

கச்சத்தீவு-நீட் பிரச்சினைகளுக்கு தி.மு.க. தான் காரணம்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: சென்னையில் நடை பெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-போடி இடையிலான அகலப்பாதை ரெயில் திட்டத்தை நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற மதுரை போடி ரெயில் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- மதுரை-தேனி ரெயில் கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. … Read more

காஷ்மீரில் நடிகையை சுட்டுகொன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரபல டி.வி. நடிகை அம்ரீன்பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் நடிகையை சுட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க நேற்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 பயங்கரவாதிகளும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய … Read more

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி நடைபெறுகிறது. 2022-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வை எழுத மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் ஆண்கள். 8.07 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 1.69 லட்சம் மருத்துவ இடங்களுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த … Read more

தமிழ்நாடு வந்தது மறக்க முடியாதது- பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.31,500 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் சென்னை வருகை தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகம் வந்தது தொடர்பாக பிரதமர் மோடி … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்ப- ஜெ. ராதாகிருஷ்ணன் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா மிகவும் குறைந்து வந்தது. நேற்றைய  கணக்கின்படி 59 பேருக்கு தினசரி கொரோனா தொற்று பதிவாகி இருந்தது.  இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் எழுதிய கடித்தத்தில், தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். … Read more

கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் வசித்து வரும் அஜித்சிங் அங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் அஜித்சிங்குக்கு இனிமையானதாக அமையவில்லை. திருமணத்துக்கு பின்னர்தான் சுமன் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வந்தது. வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கோபப்பட்டு கையில் கிடைப்பதை தூக்கி கணவரை தாக்க தொடங்கினார் சுமன். ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அஜித்சிங் … Read more

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

புது டெல்லி: உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். பின் காலிறுதியில் சீனாவின் வெய் யி, அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் சீன வீரர் திங் … Read more

நடிகைகளுக்கு போதைபொருள் சப்ளை- திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் மகன் கைது

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஆதிகேசவலு நாயுடு. இவர் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். இவரது மகன் சீனிவாஸ் (வயது 45). இவர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீனிவாசனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் பெங்களூரில் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இதையடுத்து … Read more

சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி

சென்னை: பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை … Read more