3 ஆண்களை ஒரே மாதிரி ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்- லட்சக்கணக்கில் நகை, பணம் அபேஸ்

திருப்பதி: ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மேரம்மா. இவரது மகள் திரிஷா (வயது 24). திரிஷாவுக்கும் ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடந்தது. மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே பல லட்சங்களை பறித்துக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை 2-வதாக … Read more

சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்

சென்னை: சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- பா.ம.க. வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை போன்று தீவிரமாக பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘பா.ம.க. சிறந்த செயல் வீரர்கள் விருது’ கடந்த 2020-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அதன் … Read more

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என கருதப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்பதால் வருகிற 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்… பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி … Read more

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்

லண்டன்: ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான, சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, தனது ‘ரெட் சமாதி’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கீதாஞ்சலி ஸ்ரீயின் ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ … Read more

செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடர்: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா

சென்னை: உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதில் கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார். அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இதை … Read more

ஜவகர்லால் நேரு நினைவு தினம்- நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையும் படியுங்கள்…ரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

ரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

சென்னை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ரேசன் கடைகளில் … Read more

தேவகவுடாவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி?

பெங்களூரு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த … Read more

இலங்கைக்கு ஜப்பான் நிதி உதவி கிடைக்கும்: கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று … Read more

நாடு முழுவதும் அரசு துறைகளில் 62 லட்சம் காலி பணியிடங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த காலியிட பட்டியலில் முக்கியமாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு … Read more