ஆந்திர சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டம்: சந்திரபாபு நாயுடு

விஜயவாடா : ஆந்திர மாநிலம் ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் இருந்து ஓங்கோலுக்கு மோட்டார் சைக்கிள் பேரணியாக புறப்பட்டார். வழியில், சிலகலுரிபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது, ‘ஜெகனே வெளியேறு’, ‘ஆந்திராவை காப்போம்’ என்று கோஷங்கள் எழுப்பினார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- தெலுங்கு தேசம் கட்சி மீது பழிபோடுவதற்காக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள், தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துக்கொள்கிறார்கள். நெருப்பில் இருந்து … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு- இம்ரான் கான் கண்டனம்

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி  ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது.    டீசல் ஒரு லிட்டர் 174 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபாய் 56 காசுகளாக உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா … Read more

பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது- ராஜ்நாத்சிங்

உத்தர கன்னடா: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது : உலகில் இந்தியா பற்றிய கருத்து மாறி வருகிறது. முன்பு இந்தியாவை சர்வதேச அரங்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று உலகம் இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது. அதற்கு உங்களது பங்களிப்பும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும்தான் காரணம். இது ஒரு சிறிய சாதனை அல்ல, … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷிய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம்

  27.5.2022 04.30: ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது. எனினும் இந்த போரில் இதுவரை ரஷியாவிற்கு ஆதரவாத பெலாரஸ் களம் இறங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். 03.30: மரியுபோல் துறைமுக பகுதியில் இருந்து நேற்று … Read more

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

பாரமுல்லா: ஐம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நஜிபத் பகுதியில் உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.  பாதுகாப்பு படையின நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அலி பாய், ஹனீப் பாய் மற்றும் ஷா வாலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சண்டையில் முதாசிர் அகமது ஷேக் என்ற காவலரும் … Read more

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.  மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்  இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, … Read more

லைவ் அப்டேட்ஸ்: முக்கிய நகரத்தை நெருங்கும் ரஷிய படைகள்- மேற்கத்திய நாடுகள் மீது ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தி

26.5.2022 14:00: உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடக்கும் கடுமையான போர் மற்றும் ரஷிய படைகள் முக்கிய தொழில்துறை நகரத்தை சுற்றி வளைக்க நெருங்கி வரும் நிலையில், இந்த போரில் வெற்றி பெறுவதற்கு உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் போதுமான உதவிகள் செய்யவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். எந்த வரம்புகளும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், குறிப்பாக கனரக ஆயுதங்களை அனுப்பவேண்டும் என தெரிவித்தார். 13:00: உக்ரைன் ஏற்றுமதி செய்வதற்கு … Read more

பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசியல் செய்த முதலமைச்சர்- அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.  மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,  கச்சத் தீவை மீட்டுத் தர வேண்டும்,  தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். அதுவே உண்மையான கூட்டாட்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக … Read more

மீனவர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த … Read more

தமிழக உள்கட்டமைப்புக்கு முக்கியமான நாள் இன்று – மத்திய அமைச்சர் எல். முருகன்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை உக்குவிக்கும்.   இவ்வாறு அவர் கூறினார். இதையும் … Read more