சென்னையில் 3 இடங்களில் பள்ளி பாட புத்தகங்கள் பெறலாம்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. ஜூன் 13-ந்தேதி … Read more

அன்னிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதலிடம்: பசவராஜ் பொம்மை

பெங்களூரு : கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க கடந்த 22-ந்தேதி சென்றார். அவர் கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல நிறுவனங்களின் நிறுவனங்களை கர்நாடகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோஸ் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இந்தியாவில் … Read more

நரிக்குறவர்களை தரையில் அமர வைத்து அன்னதானம்- தலசயன பெருமாள் கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்டு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 21-ந்தேதி கோவிலில் நரிக்குறவர் பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் பலர் நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும் தெரிவித்து வந்தனர்.அவரும் கோவிலில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் நரிக்குறவ பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை இணை … Read more

ஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்

புவனேஸ்வர் : ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார். அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை … Read more

உலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

லண்டன்: உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது.  குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம். காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக … Read more

அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் பரபரப்பான 3 மணி நேரம்- நீண்ட விவாதத்துக்கு பிறகு சமரசம்

சென்னை: பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில்இருந்து 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. 31-ந் தேதி வரை மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. தமிழக சட்டசபையில்உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 4 எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. கூட்டணி சார்பிலும், 2 எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க. சார்பிலும் தேர்ந்தெடுக்க முடியும். தி.மு.க. சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். … Read more

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்- கைது செய்யப்பட வாய்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக … Read more

கூட்டு பலாத்காரம் செய்து பெண் கொலை- கைதான வடமாநில வாலிபர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர். மேலும் அந்த பெண் மாயமானது குறித்து ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த … Read more

இந்தியாவில் புதிதாக 2,628 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 2,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதே போல நேற்று மகாராஷ்டிரத்தில் 470 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அம்மாநிலத்தில் கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். … Read more

இலங்கையில் வாகனங்களின் விலை கடும் உயர்வு

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு,  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் விற்பனை விலையும் தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதன்படி இலங்கையில் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர், மோட்டார்  சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல முன்னணி கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்படி முன்னணி … Read more