சேலத்தில் களை கட்டிய மாம்பழம் விற்பனை- விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சேலம்: இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கணப்பள்ளி, செந்தூரா சேலம்- பெங்களூரா, சேலம் குண்டு, நடுசாலை, குதாதத் உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிக அளவில் விளைகிறது. இந்த மாம்பழங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், … Read more

விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியா?: எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: விஜயேந்திராவிற்கு தேர்தலில் டிக்கெட் வழங்காததால் எடியூரப்பா அதிருப்தியில் உள்ளாரா என்பது குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- எங்கள் கட்சி யாருக்கு டிக்கெட் கொடுத்துள்ளதோ அதை ஏற்கிறோம். எனது மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் … Read more

பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காட்டம்

லாகூர்: பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.  இதையடுத்து பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த  சூழலில் பொருளாதாரம் பற்றி பேசாத முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் ஆட்சி கவிழ்ப்பில் சதி இருப்பதாக பேரணி நடத்தி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள … Read more

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

மும்பை : மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க மராட்டிய அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:- நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு சேர வேண்டியதை சரியாக பெற வேண்டும். நாங்கள் எதையும் இலவசமாக கேட்கவில்லை. உரிமையை … Read more

செனகல் நாட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 குழந்தைகள் உயிரிழப்பு

திவாவோன்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல். இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் கூறும்போது “பொது மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்ததை அறிந்து நான் வேதனை அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அந்தவகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் … Read more

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்

புது டெல்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா  பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர்  லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்.  அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ … Read more

இலங்கையில் 40 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420, டீசல் ரூ.400 என்ற விலையில் விற்பனையாகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம் விலை உயர்வு என இரு முனை தாக்குதலால் மக்கள் கோபம் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் காத்துக்கிடக்கவும் வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 40 … Read more

புதிய நிதி மந்திரியாக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே: பொருளாதார நெருக்கடி சவால்களை சமாளிப்பாரா?

கொழும்பு: அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதில் வன்முறை தாண்டவமாடியது. அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே (வயது 73) கடந்த … Read more

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு மறுப்பு

கொழும்பு : இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. ஆனால் மாலத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய … Read more