பா.ஜ.க. நிர்வாகி கொலை – 4 பேரை கைது செய்தது தனிப்படை

சென்னை:  சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30). பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு பாலசந்திரன் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்குச் சென்றார். அங்கு சிலருடன் பாலசந்திரன் பேசிக் கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். சம்பவ … Read more

பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் – மும்பை போலீசார் அதிரடி

மும்பை: சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களில் இது அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் கட்டாயம் விதியை மீறும் … Read more

பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்…இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்

இஸ்லாமாபாத்தில் ராணுவம் நிலைநிறுத்தம் – பாகிஸ்தான் அரசு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, பாகிஸ்தான் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் – அமெரிக்க தொழிலதிபர்

26.5.2022 02.00: டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார்.  அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆப்கானிஸ்தான் – இரு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 போ் பரிதாப பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் 5 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 போ் உயிாிழந்துள்ளதாகவும், 22 போ் காயமடைந்துள்ளதாக மருத்துவ நிா்வாகம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நாட்டின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் என்ற நகரத்தில் மினி பஸ் மீது 3 குண்டுகள் வீசப்பட்டதில் 9 … Read more

கே.எல்.ராகுல் போராட்டம் வீண் – லக்னோவை வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு

கொல்கத்தா: ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் … Read more

ஜம்மு காஷ்மீரில் கொடூரம் – வீடு புகுந்து டிவி நடிகையை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியில் டி.வி. நாடக நடிகை அம்பிரீன் பட் வீடு உள்ளது. இந்நிலையில், நடிகை அம்பிரீமின் வீட்டிற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். அம்பிரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்பிரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  துப்பாக்கி குண்டு காயத்தால் படுகாயமடைந்த 10 வயது சிறுமிக்கு … Read more

சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டராக விஜயராணி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அமிர்த ஜோதி தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்து வருகிறார். இதையும் படியுங்கள்…எம்.பி. பதவி: ப.சிதம்பரத்துக்கு சோனியா ஆதரவு- கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி

மாநிலங்களவை தேர்தல் – அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.  இதற்கிடையே, வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் … Read more