ஆபத்து… ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்- அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5வது நாளாக தாக்குதல் நடத்துகிறது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரைனுக்கு உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் தடைகளை விதித்துவருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ரஷியாவுக்கு அமெரிக்கர்கள் … Read more

இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல் – அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற – ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும். அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். … Read more

14-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை- போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் இப்ராகிம். ஜார்ஜ் ஆபிரகாமின் மகள் ரேஷ்மா ஆன் ஆபிரகாம். டாக்டரான இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணி புரிந்து வந்தார். இதற்காக அவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் வசித்து வந்தார். டாக்டர் ரேஷ்மா ஆன் ஆபிரகாம் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற ரேஷ்மா ஆன் ஆபிரகாம், திடீரென 14-வது … Read more

கார்கீவ் நகரில் குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் குண்டுவீச்சு- 11 பேர் உயிரிழப்பு

கார்கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பெலாரஸ் எல்லையில் இன்று இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷியா போரை … Read more

தமிழ் நாடு என்பது வெறும் இரண்டு வார்த்தைகள் அல்ல… ‘உங்களின் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் பெருமிதம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போது மகிழ்ச்சியான விஷயம் தான். நாடாளுமன்றத்தில் என்னை அறியாமல் பத்திரிகையாளர்களிடம் ‘நான் தமிழன்’ என்று கூறினேன். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; மாநிலங்களில் இருந்தே இந்தியா என்பது வருகிறது. சுதந்திர இந்தியாவில், முதன் முறையாக மாநில … Read more

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு- பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான ஜாலிமத் கிராமத்தில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மற்றும் மண் குவியல்கள், பல நூறு மீட்டர்கள் ஆழத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றின் கரையில் சரிந்தது. இதனால் அப்பகுதியில் புழுதி மண்டலமாக காட்சியளித்தது. இதில் கிராம மக்களின் ஏராளமான மாட்டுக் கொட்டகைகள் மற்றும் கழிப்பறைகள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

பெலாரசில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷியா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது. மேலும், ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற … Read more

உங்களின் ஒருவன்… முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று “உங்களில் ஒருவன்” புத்தகத்தை வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு முன்னிலை … Read more

மணிப்பூர் முதல்கட்ட தேர்தலில் வன்முறை- பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.53 சதவீத வாக்குப்பதிவு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5  மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் வாக்குபப்திவு மந்தமாக இருந்த நிலையில், அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது.  காலை 11 மணி நிலவரப்படி 27.34 சதவீதம் வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குகளும் பதிவாகி … Read more

இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து எல்லைக்குள் வரலாம்- தூதர் தகவல்

வர்சா: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் … Read more