இந்திய அணியில் அறிமுகமாகாமல் பிளே ஆப் போட்டியில் சதம் – ரஜத் படிதார் சாதனை

கொல்கத்தா: ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.  இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து … Read more

அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்- சசிகலா

சென்னை: சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால் இதுவரை அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் உங்களை சந்திக்கவில்லை. எந்த அடிப்படையில் அது போன்று தெரிவித்தீர்கள்? பதில்:- அது தொண்டர்கள் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் தான் நான் கூறினேன். கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவை … Read more

பாகிஸ்தானில் சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்- முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் காட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹாசீப், பாகிஸ்தானில் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி டுவிட்டரில் காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முகமது ஹாசீப், “லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் கிடைக்கவில்யைா ? ஏடிஎம் இயந்திரங்களில் பணமில்லையா? ஒரு சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும்- அமைச்சர் தகவல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய … Read more

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை- டெல்லி சிறப்பு நீதிமன்றம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் 2019-ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் தண்டனையை அறிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையும் படியுங்கள்.. விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு

கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்- முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக அவர் கூறியதாவது:- எதோ ஒரு காரணத்திற்காக பகையை வைத்துக்கொண்டு இதுபோல் செய்கிறார்கள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், காவல்துறை தன்னுடைய கண்ணியத்தை கம்பீரத்தை இழந்திருக்கிறது. காவல்துறை சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கை கையில் எடுத்து செயல்பட வேண்டும். தமிழக காவல்துறைக்கு என இந்திய அளவில் பெயர் இருக்கிறது. அரசியல் தலையீட்டால் அது இப்போது குறைந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை. இதுபோன்று … Read more

பிரதமரிடம் தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவோம் – அண்ணாமலை

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் 31,600 கோடி மதிப்பில் மத்திய அரசின் நிறைவடைந்த முக்கியத் திட்டங்களை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார். நாளை மாலை 5.10 மணிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். 3 மணிநேர பயணத்தில் மிக முக்கியமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்பட 5 ரெயில்வே நிலையங்களில் மேம்படுத்துதல் பணி … Read more

பிரதமர் மோடி நாளை வருகை- சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி, நாளை சென்னை வருகிறார். சென்னையில் அவர் காரில் செல்லும் வழிநெடுகிலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி 26.05.2022 அன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்களில் … Read more

வீரப்பன் சதோதரர் மறைவுக்கு மனித நேயமற்ற அரசு எந்திரம் தான் பொறுப்பு – ராமதாஸ்

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 35 ஆண்டுகளாக சிறையில் வாடிய வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன், அவரது உடல் நல பாதிப்புக்கு சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனித நேயமற்ற … Read more

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நீண்டநாள் தலைவர் நரிந்தர் பத்ரா. இவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், அதனால் தனது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து நரிந்தர் பத்ரா மேலும் கூறியதாவது:- உலக ஹாக்கி ஒரு இன்றியமையாத வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும் நேரத்தில் ஹாக்கியை ஊக்குவிப்பதுடன், இந்த ஆண்டு ஒரு புதிய போட்டியை உருவாக்குதல், சர்வதேச … Read more