அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள்: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். விசாரணை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. சென்னை மட்டுமல்ல சேலம் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி என அனைத்து மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க.வுக்கு தோல்விதான் ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்டிருந்த நிலையில் அங்கேயும் அ.தி.மு.க.வுக்கு சருக்கல்தான் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கிய 8 மாதத்தில் உள்ளாட்சியில் இவ்வளவு பெரிய தோல்விவியை சந்திக்கும் என்று அக்கட்சியை சார்ந்தவர்கள் கூட நினைக்கவில்லை. … Read more

ஒடிசாவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்: பா.ஜனதா-காங்கிரஸ் படுதோல்வி

ஒடிசா மாநிலத்தில் 5 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 78.68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இதில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 786 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. … Read more

நாட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்தனர் – ரஷிய படைக்கு எதிராக போரிடும் உக்ரைன் மக்கள்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி உள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை … Read more

தி.மு.க. ஆட்சியில் குண்டர்களும், ரவுடிகளும் சுதந்திரமாக திரிகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சேலம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறி அதை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் இன்று காலை சேலம் கோட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். பின்னர் அ.தி.மு.க.வினர் தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கண்டன உரை ஆற்றியதாவது:- … Read more

மணிப்பூர் முதல்கட்ட தேர்தல் – 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குப்பதிவு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் இன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5  மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு … Read more

ரஷிய படையை எதிர்க்க துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உள்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் … Read more

கடும் பனியில் விடாது ஒலிக்கும் ஏவுகனை சத்தம்- வீடியோ வெளியிட்டு காப்பாற்றக்கோரும் கொடைக்கானல் மாணவி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகில் உள்ள பாக்கியபுரத்தை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் – ஜோஸ்பின் தம்பதியின் மகள் வியானி (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதுங்கு குழியில் தங்கியுள்ள தங்கை ள காப்பாற்ற வேண்டுமென அவர் தங்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- கார்கிவ் நகரில் தற்போது மிகுந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது. … Read more

அரியானா தனியார் கம்பெனியில் 3 ஊழியர்களை கொன்ற கொள்ளையர்கள்

குர்கிராம்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் புபேந்திரா, புஷ்பேந்திரா, நரேஷ். இவர்கள் 3 பேரும் அரியானா மாநிலம் குர் கிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இயற்கை எரிவாயு கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஒரு மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கம்பெனிக்குள் புகுந்தது. அவர்கள் 3 ஊழியர்களையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் … Read more

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது

பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.    ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக … Read more

மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகம்- ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு, இளமை காலம் முதல் அரசியலில் கடந்து வந்த நிகழ்வுகள், பொதுக்கூட்ட பேச்சுகள், திரையுலகில் கால்தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகள் என அவரது 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. … Read more