மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 754 புள்ளிகள் சரிந்து 55,103 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 216 புள்ளிகள் குறைந்து 16,441 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தக்கூடும் – உக்ரைன் அரசு எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் … Read more

மகா சிவராத்திரி: நாளை இரவு சிவாலயங்களில் 4 சாமத்திலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை

சிவராத்திரியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் அனைத்து சிவாலயங்களிலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் சிவராத்திரியன்று சிவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகள் குறித்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயா குருக்கள் (எ) வெங்கட சுப்பிரமணியம் சிவாச்சாரியார் கூறியதாவது:- சிவாலயங்களில் … Read more

ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட 5-வது விமானம் டெல்லி வந்தடைந்தது

புதுடெல்லி: உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைக்காக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார்.   இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் … Read more

ரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அரசு தகவல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு … Read more

உக்ரைன் விவகாரம்: உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது … Read more

மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்

லம்பேல்பட்: ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அடுத்த கட்ட வாக்குப் பதிவு மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. . 15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். … Read more

ரஷிய ராணுவத்தை எதிர்க்க தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் – உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி

கீவ்,  ரஷியா-உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருந்தார்.  அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ரஷிய ராணுவத்தை … Read more

உக்ரைன்-ரஷியா பேச்சு வார்த்தையை வரவேற்கிறோம்: ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா தகவல்

நியூயார்க் : ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.   இந்த சிறப்பு கூட்டத்தில் இந்திய தரப்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: பெலாரஸ் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த இரு தரப்பினரும்(ரஷியா-உக்ரைன்) அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். போரினால் ஏற்படும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், அனைத்துப் பகைமைகளுக்கும் இரு நாடுகளும் முடிவு கட்ட வேண்டும் என்ற எங்களின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்.  ரஷியா … Read more

திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைனில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 16-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் 4 நாட்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இலவச தரிசன … Read more