ரஷிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.  உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.  உக்ரைனுக்கு உதவும் வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் … Read more

ரஷிய ராணுவத்தை எதிர்க்க தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் – உக்ரைன் பெண் எம்.பி.அதிரடி

கீவ்,  ரஷியா-உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருந்தார்.  அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ரஷிய ராணுவத்தை … Read more

பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்- ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நம் நாட்டிற்கு நடவடிக்கை தேவை. பிரதமர் மோடி கவனச்சிதறலை மட்டுமே வழங்குகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more

ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது விமானம் டெல்லி புறப்பட்டது

புகாரெஸ்ட்: உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைகாக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தூதர்களையும் தனித்தனியாக அழைத்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்த தமது … Read more

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

டாமோ: மத்திய பிரதேச மாநிலம், டாமோ மாவட்டம், பார்கேரா பெஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா ஆத்யா. இவர் தனது நிலத்தில்  உள்ள ஆழ்துளை கிணற்றில் (30 அடி) தண்ணீர் இல்லாததால் அதை பயன்படுத்தாமல் வைத்திருந்தார். அதேசமயம், அது மூடப்படாமல் திறந்தே கிடந்துள்ளது. இன்று பிற்பகல் அவரது மூன்று வயது குழந்தை பிரின்ஸ் ஆத்யா, விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.  இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 … Read more

வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப ஆர்வமாக உள்ளனர்: மத்திய மந்திரி தகவல்

ஃபரிதாபாத்: அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.   வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட  ராமலிங்கசாமி அடைவு மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள அறிவு பூர்வமான அறிவியல் சூழல் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர். வெளிநாடு … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து இந்தியர்கள் போலந்திற்குள் செல்ல 10 பேருந்துகள் இயக்கம் – தூதரகம் தகவல்

வார்சா: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக வான் பகுதியை உக்ரைன் மூடியுள்ளது. இதனால் அங்கு பயணிகள் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளது.  மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கி யிருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், உக்ரைன் வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  அங்கிருந்து அவர்கள் ருமேனியா தலைநர் புகாரெஸ்ட்டிற்கும், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டுக்கும் … Read more

கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி- இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார்.

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது … Read more

மாதம் ரூ.2.52 லட்சம்… உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் அதிபர்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள், தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக … Read more