மூன்றாவது டி20 கிரிக்கெட்- 146 ரன்களில் இலங்கையை கட்டுப்படுத்தியது இந்தியா

தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, முன்வரிசை வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. குணதிலக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினா. நிசங்கா (1), அசலங்கா (4), ஜனித்லியாங்கே (9) ஆகியோர் … Read more

சாகும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வேன்- பிரதமர் மோடி உருக்கம்

வாரணாசி: பிரதமர் மோடி இன்று தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதுகிறார்கள். தொண்டர்களின் கட்சியான பாஜகவுக்கு அவர்களால் ஒருபோதும் சவால் … Read more

கனடா நாட்டின் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு … Read more

உ.பி 5-ம் கட்ட தேர்தல் நிறைவு- 5 மணி நிலவரப்படி 53.98 சதவீத வாக்குகள் பதிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் புறப்படுகிறது- வெளியுறவுத்துறை தகவல்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறியதாவது:- உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக கங்கா ஆபரேஷன் மூலம் விமானங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், அடுத்த 24 மணி நேரத்தில் ரூமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு 2 விமானங்களும் … Read more

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் … Read more

கையில் இருக்கும் உணவு 2 நாளில் தீர்ந்து விடும்- உக்ரைனில் தவிக்கும் தென்காசி மாணவர்கள் கண்ணீர் மல்க வீடியோ

கடையநல்லூர்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெருவை சேர்ந்த அக்பர்அலி மகன் அப்துல் அஜீம், பீர்முகம்மது மகன் ஜியாத், அமீனுத்தீன் மகன் அப்துர் ரஹ்மான், முகமது கனி மகன் … Read more

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல்- பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீதம், மதியம் 1 மணி … Read more

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு வழங்கப்பட்ட கௌரவ தலைவர் பதவி ரத்து

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இன்று 4-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஏற்கனவே பல்வேறு நாடுகளும் ரஷியா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் … Read more

நெல்லை இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் 4-ம் கட்ட சோதனை வெற்றி

பணகுடி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின் தாள்வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் செயல் படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2023-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் … Read more