மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.  இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஷேத்ரிகாவ் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாகங்பாம் ரோகித் சிங், நேற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகித் சிங் இம்பாலில் … Read more

ஒத்துழைப்பு தராவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்- ரஷியா மிரட்டல்

உக்ரைன் மீது ரஷியா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷியாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை ரஷியா மறைமுகமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும் … Read more

உக்ரைன்- ரஷியா போரால் நெருக்கடிக்குள்ளாகிய டெக் நிறுவனங்கள்

உக்ரைன் மீது ரஷியா சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் நேட்டோ உறுப்பினர் இல்லாததால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வரும் உலக நாடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் பேன்ற லாபம் சம்பாதிக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதா? ரஷியாவுக்கு ஆதரவாக … Read more

சத்தீஷ்கரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் 2 பெண் நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். இதையும் படியுங்கள்…சாலை அடையாளங்கள் அழிப்பு: எதிரிகள் நேராக நரகத்திற்கு செல்ல உதவும்- உக்ரைன் நிறுவனம்

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு – உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்யா உத்தரவு

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர்.  இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் 976 ராணுவ மையங்களை தாக்கி அழித்துள்ளோம் என ரஷியா … Read more

சாலை அடையாளங்கள் அழிப்பு: எதிரிகள் நேராக நரகத்திற்கு செல்ல உதவும்- உக்ரைன் நிறுவனம்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாட்களாக போர் தொடுத்து வருகிறது. முதலில் கிழக்கு பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்ததாக ரஷியா தெரிவித்தது. பின்னர் பெலாரஸ் உடன் இணைந்து கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் இருந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. அதன்பின் பாராசூட் மூலம் உக்ரைன் நகருக்குள் ரஷிய வீரர்கள் தரையிறங்கினர். இதற்கிடையே சரண் அடையமாட்டோம். நாட்டை இழக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் உறுதியாக தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ரஷியா … Read more

7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை மீட்டுள்ளோம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த கிலி, நீமா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய இசை, பாடல்களுக்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைந்த அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டார்.  … Read more

4-வது நாளாக தொடரும் போர்: கார்கிவ் நகரில் தாக்குதல் நடத்தும் ரஷியா

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் கீவில்  இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் … Read more

அடங்க மறுக்கும் வடகொரியா – 8வது முறையாக ஏவுகணை சோதனை

சியோல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.  இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா தனது ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் … Read more

தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மணிப்பூரில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி

இம்பால்: 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று 5-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. அடுத்த கட்டமாக மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் குண்டுவெடித்துள்ளது. தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் … Read more