கார் மீது ஏறிய ரஷிய ராணுவ டாங்கி- வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு

கிவ்: உக்ரைன் நாடு மீது ரஷிய ராணுவம் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் மாளிகையை கைப்பற்ற தலைநகர் கிவ் நோக்கி ராணுவத்தின் டாங்கிகள் நகர்ந்து வருகிறது. அவை விளை நிலங்கள் வழியாக செல்வதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக உக்ரைன் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ரஷிய போர் விமானங்கள் வீசிய ராக்கெட் குண்டுகளால் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதற்கிடையே உக்ரைனின் ஒபலோனின் நகர் பகுதிக்குள் நுழைந்த ராணுவ டாங்கிகள் அங்கிருந்த சாலைகள் … Read more

ரஷிய ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் கேரள மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்- பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்:  ரஷிய ராணுவம் கடந்த 24-ந் தேதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறி வருகிறார்கள். அங்கு கேரளாவை சேர்ந்த 2,340 பேர் மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் இருந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விமானங்கள் மூலமாக தாயகம் திரும்பும் கேரள மாணவர்களின் பயணசெலவை மாநில அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் … Read more

தென்கொரியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா

சியோல்: தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அந்த வகையில் அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1½ லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 28 லட்சத்து 31 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் அதே வேளையில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக அதிகரித்து … Read more

தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நேற்றைய பாதிப்பு 618 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 46 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட … Read more

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

லக்னோ: உத்தர பிரதேச சட்ட சபையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.   இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். 12 மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை … Read more

உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் – வான் வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் மீதான படையெடுப்பால் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷிய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.  ரஷியாவுக்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைனுக்கு, நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள்,  ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் … Read more

ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்த வேண்டும் – உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வேண்டுகோள்

கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்த வேண்டும். அங்குள்ள இந்திய அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு செல்லக் கூடாது. பல்வேறு எல்லைச் சோதனைச் சாவடிகளில் நமது மக்களை ஒருங்கிணைத்து வெளியேற்றுவதற்காக நமது அண்டை நாடுகளில் உள்ள நமது தூதரகங்களுடன் உக்ரைன் இந்திய தூதரகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. முன்னறிவிப்பின்றி எல்லைச் சோதனைச் சாவடிகளை அடையும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவது கடினமாக … Read more

மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் – நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் நம்பிக்கை

மும்பை: ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.  ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.  இந்நிலையில் உக்ரைன் எல்லை வழியே ருமேனிய எல்லைக்கு வரும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை தலைநகர் புக்கரெஸ்ட்டிற்கு அழைத்துச் செல்லும் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பும் பணிகளை … Read more

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் – ஜெர்மனி அறிவிப்பு

வியன்னா: ரஷிய படையெடுப்பால் தவித்து வரும் உக்ரைனுக்கு,  சில ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாக  டெல்லியில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்தார்.  இந்நிலையில், உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை நேரடியாக அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.  இது தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் பீரங்கி … Read more