டெல்லியில் புதிய தளர்வு: இனி காரில் செல்ல மாஸ்க் அணிய தேவையில்லை

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி அரசு முன்னதாக காரில் தனியாக செல்பவர்கள் மட்டும் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவித்திருந்தது. மேலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. … Read more

அரசியல் ஆதரவு கொடுங்கள்… இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷிய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும் ரஷிய படைகள் தாக்குகின்றன.  உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்தில் இணைந்த பொதுமக்களுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் … Read more

போருக்கு மத்தியில் கீவ் நகரில் பிறந்த பெண் குழந்தை

உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவுக்குள் புகுந்தும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த போருக்கு மத்தியில் சுரங்கத்தில் பதுங்கி இருந்த 23 வயதான பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கீவ் நகரத்தில் … Read more

5 மாநில தேர்தல் ரூ. 1000 கோடி மதிப்பிலான மது- பணம், இலவச பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி: உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரபிர தேசத்தில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மணிப்பூரில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு … Read more

ரஷியாவுக்கு கண்டனம், உக்ரைனுக்கு ஆதரவு… உலகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்

டோக்கியோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவை சுற்றி வளைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகளும் சண்டையிட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததால் பொதுமக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.  போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. எனினும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இப்போது இல்லை.  இது ஒருபுறமிருக்க ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராகவும், … Read more

மெக்சிகோ ஓபன்- இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

மெக்சிகோவின் அகபல்கோவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனிஷ் மெத்வதேவை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நடாலிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெத்வதேவ் இன்று மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார். எனினும், நடாலை வீழ்த்த முடியவில்லை. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். … Read more

குஜராத் மக்களுக்கு பாஜக அதிக கேடு விளைவித்தது- ராகுல் காந்தி பேச்சு

துவாரகா: குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:- அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை, ஊடகங்கள், காவல்துறை, குண்டர்கள் மற்றும் தினமும் புதிய ஆடைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் முக்கியமில்லை. உண்மைதான் முக்கியம் என்பதை குஜராத் நமக்குக் கற்றுக்கொடுத்தது. மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் எப்போதாவது நல்ல ஆடைகளை அணிந்திருந்தாரா? அமலாக்கத்துறை அல்லது சிபிஐயை தவறாக பயன்படுத்தினாரா? இல்லை. ஏனென்றால் உண்மை … Read more

ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரைன் ராணுவ வீரர்

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நட்பு நாடுகள்- போர் மேலும் தீவிரமடையும்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான … Read more

பிரிந்து சென்றதால் கோபம்- மனித வெடிகுண்டாக மாறி மனைவியை கொன்ற கணவர்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆராவல்லி மாவட்டம் மெகராஜ் நகரில் வசித்து வருபவர் லாலாபாகி (வயது 45) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சாராபென் (43). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 45 நாட்களுக்கு முன்பு சாராபென் கணருடன் கோபித்துக் கொண்டு பி.டி.சப்ரா பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனாலும் லாலாபாகிக்கு மனசு கேட்கவில்லை. மாமனார் … Read more