ரஷிய ராணுவம் கைப்பற்றிய செர்னோபில் அணு உலையில் கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு

உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷியா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இது குறித்து உக்ரைன் அரசு கூறும்போது, “செர்னோபில் அணு உலையை ரஷியா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன” என்று தெரிவித்தது. ஆனால் ரஷியா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாத குழுக்களும் தாக்குதல் … Read more

மேயர் பதவிக்காக தி.மு.க.வுடன் பா.ஜனதா மல்லுகட்டுவது ஏன்?- பொன்.ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இதில் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க. பெருவாரியான கவுன்சிலர்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை கைப்பற்றி உள்ளது. வருகிற 4-ந் தேதி மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா ஓரளவு வாக்குகளை பெற்று உள்ளது. பா.ஜனதா வலிமையாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலை சந்தித்தது. மொத்தம் 52 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில் தி.மு.க.வும், … Read more

தெலுங்கானா அருகே சோகம் – விமான விபத்தில் தமிழக பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. இதில் பயிற்சியாளர் உள்பட 2 விமானிகள் உயிரிழந்தனர் இந்த விமானம் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லாவில் இருந்து புறப்பட்டது. கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் அணைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கிடந்ததுள்ளது.  இந்த விமான … Read more

உக்ரைன் நாட்டு கொடியின் வண்ணங்களில் ஒளிரும் ஈபிள் டவர்

உக்ரைனில் ரஷியா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மக்கள் மிரண்டு உள்ளனர்.   உக்ரைன் தலைநகர் கியேவை ரஷியா ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கையில் எடுத்தால் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புதின் … Read more

மீண்டும் உக்ரைன் செல்லும் மாணவர்களின் செலவையும் அரசு ஏற்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைன் போர் சூழலை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் இந்திய மாணவர்கள் பட்ட சிரமம் வருத்தத்திற்குரியது. இப்பொழுதேனும் மீட்பு நடவடிக்கையில் அவர்களின் பயணச் செலவை மத்திய, மாநில (தமிழக) அரசுகள் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இந்தியா திரும்பும் செலவை இரு அரசுகளும் ஏற்கும் என்றாலும், உக்ரைனில் மறுபடியும் தங்கிப்படிக்கும் சூழல் உருவானபின் அங்கு திரும்பிச் செல்லும் செலவை யார் செய்வது என்பதே நடுத்தர மாணவர்களின் கேள்வி. … Read more

சிறப்பு விமானத்தில் வரவிருக்கும் 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர். உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் … Read more

ஆயுதங்களை கீழே போட மாட்டோம்: நாட்டையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ரகசிய இடத்தில் உள்ளார். அங்கிருந்தபடி தான் பேசும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரஷியா தாக்குதலை தொடர்ந்து பேசிய அவர் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும் ரஷியாவை எதிர்த்து தன்னந் தனியாக போராடி வருகிறோம். எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ரஷியாவின் முதல் இலக்கு நான்தான், 2-வது இலக்கு எனது குடும்பம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் … Read more

உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்- ஐ.நா.சபை தகவல்

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ரஷியா தாக்குதலை தொடங்கியதுமே ஆயிரக்கணக்கானோர் கார்களில் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் தலைநகர் கீவ்வில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி மக்கள் சென்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் … Read more

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது

புதுடெல்லி: இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.   இந்தப் பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகுரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உக்ரைனில் போர் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான … Read more

உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவோம்- நேட்டோ அறிவிப்பு

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷியா போரை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. ஆனால் தற்போது உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் ரஷிய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, “தங்களுக்கு எந்த நாடும் … Read more