இந்தியாவில் மேலும் 11499 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 11,499 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,21,881 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய பாசிட்டிவ் ரேட் 1.01 சதவீதம் ஆகும். 255 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,13,281 ஆக உயர்ந்துள்ளது.   இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4.22 … Read more

திருப்பதி மலையில் திடீர் காட்டுத் தீ

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோடை காலம் தொடங்கி உள்ளதால் திருப்பதி மலையில் நன்கு வளர்ந்துள்ள மரங்களில் உள்ள இலைகள் மற்றும் சருகுகள் காய்ந்து உள்ளன. இவை காற்றினால் உதிர்ந்து கீழே விழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பதி மலையில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ள வனபகுதிகளில் திடீரென தீ பற்றி எரிந்தது. மளமளவென எரிந்த தீ காட்டு பகுதி முழுவதும் பரவியது. இதில் வனப்பகுதியில் உள்ள … Read more

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள ராணுவ தளத்தைக் … Read more

உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில், நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும். அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?. உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள். இதன் காரணமாக செயற்கைப் … Read more

உக்ரைன் இந்தியர்களை மீட்கும் முயற்சி – மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர்படிப்புகள் படித்து வருகிறார்கள். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து  இருப்பதை தொடர்ந்து அவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் ஒரு விமானம் உக்ரைன் புறப்பட்டது. ஆனால் உக்ரைன் வான்வெளி மூடப்பட்டதால் அந்த விமானம் மீண்டும்  இந்தியா திரும்பிவிட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது சர்வதேச … Read more

ரஷியா-உக்ரைன் இருநாட்டு படை பலம்

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது. இந்த போர் பற்றிய உண்மைகள் கிறங்கடிக்கும். ஆமாம், உக்ரைனின் ஆயுதப்படைகள் ரஷியாவுக்கு எதிராக எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அறிகிற போது, கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. உக்ரைனைவிட ரஷியா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமோ அதிகம். ஆனால் ஒன்று, உக்ரைனிடம் இருந்து ரஷியாவுக்கு வருகிற ராணுவ சவால் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ரஷியா 1990-களில் பிரிந்த செசன்யா, 2008-ல் … Read more

ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்- ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷியா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும்  முழுமையாக  திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு … Read more

ஆன்லைன் வகுப்புகள் கிடையாது- டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள்

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகளில் முழுமையாக நேரடி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  “வேலையிழப்பு காரணமாக மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்வதாலும், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீரடைந்திருப்பதாலும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து … Read more

போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – உக்ரைன் தகவல்

கிவ்: உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  போர் பதற்றம் காரணமாக, உக்ரைன் மக்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் இடம் பெயர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தொலைபேசி மூலம் ஆலோசனை … Read more

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுங்கள்- உக்ரைன் ராணுவத்திற்கு புதின் அழைப்பு

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.   இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடக்குமுறையில் … Read more