கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் ஆத்திரம்- அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய பயணிகள்

திண்டிவனம்: மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6-வது மற்றும் 7-வது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில் தண்ணீர் நிரப்பும் படி பயணிகள் ஒவ்வொரு ரெயில் நிலையமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை. இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தது. அங்கும் தண்ணி நிரப்பாமல் … Read more

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ரூ.1 கோடியை இழந்த தபால் நிலைய அதிகாரி கைது

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பினா துணை தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக இருப்பவர் விஷால் அரிவார். இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்தனர். அதற்கு அவர் போலியான நிரந்தர கணக்குகளை தொடங்கி உண்மையான பாஸ்புக்குகளை வழங்கி இருக்கிறார். வாடிக்கயைாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்து அவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டார். தபால் நிலைய அதிகாரி விஷால் கடந்த 2 ஆண்டாக 24 குடும்பங்களின் சேமிப்பு பணத்தை வைத்து ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி … Read more

ராமேஸ்வரத்தில் பாலியல் வன்கொடுமை: இறால் பண்ணைக்கு சீல் வைத்து வருவாய்த்துறை நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் … Read more

பங்கு சந்தை முறைகேடு- ரூ.3.12 கோடி அபராதத்தை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 2013-ம் முதல் 2016 ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையான (என்எஸ்.இ.) நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். அப்போது என்.எஸ்.இ. அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குசந்தை தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜண்டு களால் முன்கூட்டியே கசிய விட்ட முறைகேடு பண மோசடி செய்ததாக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மாதம் 6-ந் தேதி சி.பி.ஐ. … Read more

ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை- உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

கிவ், மே. 25- உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷிய அதிபர் புதின் மீது உக்ரைன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. உக்ரைனை அழிக்க புதின் நினைக்கிறார் என்று தெரிவிக்கிறது. இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடோனே பரபரப்பான … Read more

சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (26-ந்தேதி) சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.12,400 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நாளை மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். மாலை 5.10 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில்சிபல் திடீர் விலகல்

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில்சிபல். காங்கிரஸ் தலைமையை விமர்சித்த 23 அதிருப்தி தலைவர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் நடைமுறையில் மாற்றம் தேவை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் யாரும் தலைமை வகிக்க கூடாது என்று கபில்சிபல் தெரிவித்து இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே அவர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வந்தார். சமீபகாலமாகவே சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 2024-ம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சோனியா … Read more

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் … Read more

ஒடிசா பேருந்து விபத்தில் 6 பேர் பலி- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பேருந்து சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். … Read more

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை

கொழும்பு: இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது. இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி … Read more