ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம்- இந்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கும் ரஷியா

புதுடெல்லி: கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ரஷியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதனை தொடர்ந்து  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன.  … Read more

ரஷிய அதிபரின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும்  ஒப்புதல் தெரிவித்துள்ளது.  அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அவசர கால மீட்புக் குழுக்கள் – தமிழக பாஜக தகவல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக பாஜக சார்பில் அவசர கால தொடர்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹெல்ப் லைன் மூலம் எனக்கு கிடைக்கும் தகவல்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் இதர தமிழர்களின் நிலைமைகளை விளக்கி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு … Read more

உ.பியில் கார் விபத்து: காயமின்றி தப்பினார் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூரின் ஜமானியா, முஹமதாபாத் உள்ளிட்ட பல்வேறு சட்டசபை தொகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். இன்று காலை வாரணாசியில் இருந்து தனது சொந்த ஊரான காஜிபூருக்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென ராஜ்காட் பாலத்தின் சரிவில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தூண் மீது மோதியது. இதில் காரின் இடது பக்கம் சேதமடைந்தது. காரின் ஒரு சக்கரமும் … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்கள் இயக்கம் – ஏர் இந்தியா தகவல்

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் காரணமாக  அங்குள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு இன்று இரண்டு விமானங்கள் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து வெளியேறும் பாதைகள் குறித்த விபரங்களை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனுக்கு ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 1000க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் கூறி உள்ளது.    போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் … Read more

இணைய பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை – மத்திய இணை மந்திரி தகவல்

சென்னை: தேசிய தரவு மற்றும் கிளவுட் வரைவு கொள்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது 80 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்பு முதல் வேலை, பொழுதுபோக்கு வரை பல்வேறு நோக்கங்களுக்காக 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணைய பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு … Read more

ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம்

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷிய ஆக்ரமிப்பு ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை குலைத்து விட்டதாக  நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் மீது நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட இந்த படையெடுப்பிற்கு … Read more

புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது டெல்லி அணி

பெங்களூரு: எட்டாவது புரோ கபடி லீக் பெங்களூருவில் நடைபெற்றறது. அரை இறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் உ.பி. யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின.  பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாகவும், ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 2-வது முறையாகவும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தன.  வெற்றிக் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், டெல்லி-பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம … Read more

உக்ரைன் பதற்றம்- டெல்லியில் ரஷிய தூதரகம் முற்றுகை

புதுடெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, இரண்டாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வான்வழி மூடப்பட்டதால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை உள்ளது.  உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். … Read more