திருப்பதியில் ஆர்ஜித சேவை உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யவில்லை- தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் அதிக அளவில் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும் நோக்கத்தில் சிபாரிசு கடிதத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக சேவை டிக்கெட்டுகள் விலை உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். அறங்காவலர் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் வெளிப்படைத் தன்மையுடன் … Read more

உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது . இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்நிலையில், உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியுள்ளோம் என ரஷ்ய ராணுவப் படை தெரிவித்துள்ளது. … Read more

ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷியா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் … Read more

வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை

கொல்கத்தா : மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த கவர்னர் ஜக்தீப் தன்கார் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 7-ந் தேதி நள்ளிரவில் சட்டசபை கூட்டம் ஆரம்பிக்க உள்ளது. சட்டசபை கூட்டம் தொடர்பாக கவர்னருக்கு மாநில அரசால் அனுப்பட்ட பரிந்துரை … Read more

துனிசியா நாட்டில் இஸ்ரேலிய நடிகை படத்துக்கு தடை

துனிஸ் : இஸ்ரேலிய நடிகை கேல் கடோட் நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியா திடீர் தடை போட்டுள்ளது. இதன் பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. நடிகை கேல் கடோட், இஸ்ரேல் ராணுவத்தின் பணியாற்றி உள்ளார், இவர், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை ஆதரிக்கிறார் என்று கூறப்படுவதால், துனிசியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக துனிசியா திரையரங்குகளில் இருந்து, அவர் நடித்துள்ள ‘டெத் ஆன் தி நைல்’ என்ற திரைப்படம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இந்தப்படம் இங்கிலாந்து … Read more

புதின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – ரஷிய மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு புதின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது.  மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், செல்யாபின்ஸ்க் உள்பட 53 நகரங்களில் புதின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் ரஷிய சமூக ஊடகங்களில் புதின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.  … Read more

புதினிடம் பேசி போரை நிறுத்தச் சொல்லுங்கள்… மோடிக்கு உக்ரைன் தூதர் வேண்டுகோள்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால், பொதுமக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் … Read more

நாட்டை காக்க உக்ரைன் மக்கள் முன் வர வேண்டும் – அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு

கீவ்: ரஷியா தாக்குதலால் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷியா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள், அமைதியான … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாயம் – ரஷிய அதிபர் புதின் கருத்து

மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுப்பு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன்  ரஷிய அதிபர் புதின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு வழிகளில் எதிர்வினையாற்ற இயலாது என்று விளக்கினார். உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாய நடவடிக்கை என்றும் அவர் விளக்கம் அளித்தார். உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் புதின் குறிப்பிட்டார். மேலும் உலகப் பொருளாதாரத்தில் … Read more

உக்ரைனில் 74 ராணுவ இலக்குகளை குண்டு வீசி அழித்தது ரஷியா

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. இதில், உக்ரைனில் உள்ள 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ இலக்குகளை அழித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு … Read more