உக்ரைன் அண்டை நாடுகள் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ரஷிய ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளது.  இந்நிலையில் உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய மாணவர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.  இது தொடர்பாக உதவி கோரி, ருமேனியா, … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டமில்லை – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கூட்டு பதிலடியை கொடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.  பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பைடன்,  ரஷியாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்.  அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நான்கு பெரிய ரஷிய வங்கிகளின் சொத்துக்களை முடக்கும் என்றும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என்றும் பைடன் தெரிவித்தார்.  புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும், போரைத் … Read more

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி அறிமுகம் – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடுகளை களையும் வகையில் குறை தீர்ப்பு செயலியை மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி கிரிராஜ் சிங் நேற்று தொடக்கி வைத்தார். இதற்கான  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பல தரப்பிலிருந்து பெறப்படும் புகார்களை எளிதாக வகைப்படுத்தி தெரிவிக்கும் வகையில், இந்த குறை தீர்ப்பு செயலியை ஊரக மேம்பாட்டு … Read more

செர்னோபில் நகரை கைப்பற்றியது ரஷியா – அணுமின் நிலையம் மீதான தாக்குதலால் கதிர்வீச்சு அபாயம்

கீவ்: உக்ரைன் மீது நேற்று போர் தொடங்கிய ரஷிய படைகள் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதல்களை நடத்தின. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.   அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் பாதுகாப்புத் தளங்களையும் ரஷியா தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.  நேற்று … Read more

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா- ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்

கோவை: கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.   ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை … Read more

ரஷியா மீதான எந்தவொரு தடையும், இந்தியாவுடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் குறித்து,  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த அவசர கூட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாய நடவடிக்கை – ரஷிய அதிபர் புதின் கருத்து

மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுப்பு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன்  ரஷிய அதிபர் புதின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு வழிகளில் எதிர்வினையாற்ற இயலாது என்று விளக்கினார்.  உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் புதின் குறிப்பிட்டார். மேலும் உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா ஒரு அங்கமாகவே உள்ளதால், உலகப் பொருளாதார அமைப்பைச் சேதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை … Read more

137 ரன்களில் இலங்கையை சுருட்டியது- முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

லக்னோ: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல்  20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 44 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து 200 ரன்கள் … Read more

போரை உடனே நிறுத்துங்கள்… ரஷிய அதிபர் புதினிடம் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.  ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று … Read more

பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்: உக்ரைனுக்குள் ரஷிய படைகள் ஊடுருவி உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் போர் விமானங்களின் சத்தம், வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வான்எல்லை மூடப்பட்டதால் உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் … Read more