முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.   இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கு கண்டனம் … Read more

புயலால் கவிழ்ந்த படகு- 16 பேரைக் காணவில்லை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தரா மாவட்டத்தில் பயணிகளுடன் நதியில் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானது. நிர்சாவில் இருந்து ஜாம்தரா நோக்கி சென்றுகொண்டிருந்த படகு, பார்பெண்டியா பாலம் அருகே சென்றபோது, கடுமையான புயல் காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 16 … Read more

உக்ரைன் கீவ் நகரம் அருகே விழுந்து நொறுங்கியது ராணுவ விமானம்- 14 பேர் கதி என்ன?

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. இதற்கு மத்தியில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் 14 … Read more

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்கவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24-2-2022) கடிதம் எழுதியுள்ளார். இன்று (24.2.2022) அதிகாலையில் ரஷிய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் உடனடி கவனத்தை … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசம் மாநிலத்தில் வரும் 27-ம் தேதி 5-ம் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், உ.பியில் உள்ள மஸ்கன்வாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டெடுக்க மத்திய அரசு தனது வலிமையைக் காட்ட வேண்டும். மாணவர்களை மீட்டெடுக்கும் முயற்சியை மத்திய அரசு முன்பே செய்திருக்க வேண்டும். உக்ரைனில் … Read more

உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி

கீவ்: ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.  அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. ரஷிய போர் விமானங்கள் … Read more

2-வது வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சென்னை: தி.மு.க. உறுப்பினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது 2-வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாமின் கோரி ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி … Read more

உக்ரைன் விவகாரம்- இன்று ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால், பொதுமக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. தலைநகரில் உள்ள உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தையும் ரஷிய படை குண்டு வீசி தகர்த்துள்ளது. கிழக்கு உக்ரைன் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என … Read more

உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தை தகர்த்தது ரஷிய படை

உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய படை பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷிய படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு ஆசோவ் கடற்பகுதியில் தங்களது 2 சரக்கு கப்பல்களை … Read more

பட்டாசு ஆலையில் தீ விபத்து- 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர்.  இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.