அதிகாலை முதல் குண்டு மழை பொழிந்தபடி உள்ளது- உக்ரைனுக்கு படிக்க சென்ற கேரள மாணவர்கள் தகவல்

கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் தங்கி உயர் கல்வி படித்து வருகிறார்கள். அங்கு போர் பதட்டம் ஏற்பட்டதும் அவர்களில் பலர் ஊர் திரும்பினர். ஆனால் இன்னும் பல மாணவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்று கேரளா வந்த தங்களின் நண்பர்களை தொடர்பு கொண்டு உக்ரைன் போர் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதன்விபரம் வருமாறு:- உக்ரைன் எல்லையில் வசிக்கும் கேரள மாணவர்கள் எங்களை தொடர்பு கொண்டு போர் தொடங்கி விட்ட … Read more

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன், நேட்டோ, ஜி7 நாடுகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைவிதிப்பு

உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக ரஷியா மறுப்பு தெரிவித்து வந்தது. ஆனால், உக்ரைன் நேட்டோ அமைப்பின் உறுப்பினராக தீவிரம் காட்டியதால், ரஷியா கோபம் அடைந்தது. இதனால் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்தார். இதனால் போர் நிகழும் அபாயம் ஏற்பட்டது. ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் சமாதானம் பேச முயற்சி செய்தனர். அமெரிக்கா … Read more

உக்ரைனில் படிக்கும் 4 ஆயிரம் தமிழக மாணவர்களின் கதி என்ன?

சென்னை: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தூதரகம் மூலம் எடுக்கத் தொடங்கியது. ஆனால் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தாயகம் திரும்பி இருக்கிறார்கள். உக்ரைனில் சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். மருத்துவம், ஏரோநேடிக் என்ஜினியரிங் போன்ற படிப்புகளை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். விடுதிகளிலும், … Read more

காளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள் மற்றும் சிவன் அம்பாள் உலாவரும் மாடவீதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வீதி உலாவிற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் சீரமைப்பு செய்து வண்ணம் பூசப்பட்டு உள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலை அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் கூடுதல் … Read more

ரஷியாவுக்கான கருங்கடல் நீர்வழிகளை மூடுமாறு துருக்கியிடம் உக்ரைன் வேண்டுகோள்

ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷிய போர்க்கப்பல்களை போஸ்பரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஆகிய கருங்கடல் நீர்வழியாக அனுமதிக்க வேண்டாம் என்று  துருக்கிக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தூதர் … Read more

நாடு முழுவதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைன் தங்களது இலக்கு இல்லை எனவும் புதின் அறிவித்திருந்தார். ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில ரஷியா ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்த நிலையில் தற்பாதுப்பை மேற்கொண்டு வரும் உக்ரைன், ரஷியாவின் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷியா தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிர் ஜெலென்ஸ்கி … Read more

திருப்பதியில் நேரடி இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் விடுதிகளில் தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்பதற்கும் கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது. பலர் டிக்கெட் வழங்கும் கவுண்டர் … Read more

ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல்- ரஷியா விளக்கம்

உக்ரைனில் ரஷிய ராணுவம் முழு அளவில் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசவில்லை என்று ரஷியா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரஷிய தரப்பில் கூறியதாவது:- உக்ரைன் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீசப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து … Read more

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 22 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 60), சிவபாரதி (27), சவுந்தரராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு கச்சத்தீவு … Read more

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,232.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் குறியீட்டு சென்செக்ஸ் 1813 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. அதன்பின் பெரிய அளவில் உயரவில்லை. சிறிது நேரத்தில் 55,147.73 புள்ளிகளுக்கு குறிந்தது. தற்போது 10 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் குறையீடு சென்செக்ஸ் 55,249.89 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. காலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது 1,982.17 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகிறது. இதையும் படியுங்கள்… உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை- புதின் … Read more