ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர் – உக்ரைன் ஆவேசம்

ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. ரஷியாவின் ராணுவ படைகள் உக்ரைன் எல்லையில் நுழைய தொடங்கின. கார்கிவ் நகரை நோக்கி ரஷிய ராணுவ படைகள் முன்னேறுகின்றன.  இந்நிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது:- ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர். … Read more

ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரானின் புதிய வடிவமும் தாக்க வாய்ப்பு: ஆய்வு தகவல்

லண்டன் : கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பர் மாதம் முதன் முதலாக வெளிப்பட்டது. தொடர்ந்து அது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் (பிஏ.1) கண்டறியப்பட்டு இன்றைக்கு அதுவும் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்த வைரசை கவலைக்குரிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. இந்த நிலையில் ஒமைக்ரானின் புதிய … Read more

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் 5 தேஜாஸ் விமானங்கள்

புதுடெல்லி: இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த விமானங்கள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுடன் இணைந்து சாகசத்தில் ஈடுபடும். ஏற்கனவே இந்த விமானங்கள் சமீபத்தில் நடந்த … Read more

உலக நாடுகளுக்கு மலிவு விலையில் இந்தியா தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய- அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. உலக நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்க, இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு … Read more

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கும் முயற்சியில் அவசரமாக தலையிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாகப்பட்டினம், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் 17.2.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில், கோடியக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தூரத்தில் தங்களுடைய பைபர் படகில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடி சாதனங்கள், எரிபொருள் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். … Read more

பீடி தரமறுத்ததால் ஆத்திரம் – தந்தையை கொன்ற மகன் கைது

கவுகாத்தி: அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்மியா (50). அவரது மகன் சம்சுல் ஹோக் (30).  நேற்று லால்மியா பீடி குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, சம்சுல் தனக்கும் பீடி வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டபோது அவரும் கொடுத்துள்ளார். சம்சுல் மீண்டும் ஒரு பீடி கேட்டதற்கு, அவரது தந்தை தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த சம்சுல் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறவே, சம்சுல் … Read more

மக்கள் அமைதி காக்க வேண்டும் – உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

கியூ: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா தனது படைகளை … Read more

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நீக்கம்

மெக்சிகோ : ஜெர்மனியை சேர்ந்தவரும், தரவரிசையில் நம்பர் 3 இடத்தைப் பிடித்தவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மெக்சிகோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்வெரேவ் பிரேசிலின் மார்சிலோ மெலோவுடன் இணைந்து விளையாடினார். அதில் ஸ்வெரேவ் ஜோடி தோல்வி அடைந்தது. டைபிரேக்கரின் போது ஸ்வெரேவ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்வெரேவ் நடுவர் காலை தாக்குவது போல் அவர் அமர்ந்திருந்த நாற்காலி மீது டென்னிஸ் பேட்டால் ஓங்கி அடித்தார். அவரது செயல் … Read more

நேரடி தேர்வால் மனவேதனை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில வசித்து வந்த 17 வயது 10-ம் வகுப்பு மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்து வந்தான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஒமைக்ரான் வைரஸ் தொற்று கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வேகமாக பரவியது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து விஸ்வரூபம் எடுத்து … Read more

அவசரநிலை சட்டம் ரத்து – கனடா பிரதமர் அறிவிப்பு

ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாரி  டிரைவர்கள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.    … Read more