ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், அந்தப் பகுதிகளில் … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்பு – மத்திய அரசு

புதுடெல்லி: பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனு மீதான் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்கி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சமீபத்திய திருத்தங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கொண்டவை என்கின்றனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் … Read more

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் – ஒப்புதல் அளித்தது பாராளுமன்றம்

கியூ: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா … Read more

புரோ கபடி லீக் – பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின

பெங்களூர்: 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்சும், … Read more

உ.பி. நான்காம் கட்ட தேர்தல் – 61.5 சதவீதம் வாக்குப்பதிவு

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன. இதற்கிடையே, நேற்று மொத்தம் 59 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின் பேசிய அவர், பா.ஜ.க. மீண்டும் வரலாறு படைப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த முறையை விட அதிக இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார். லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர் உள்ளிட்ட … Read more

பெண்களுக்கு 50 சதவீத வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத வார்டு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.  அதன்படி சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டபோது 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்தும், வார்டு மறுவரையரை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் முத்துராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

புதுடெல்லி: இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016-ல்  போடப்பட்டது.  இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே 32 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.  இதுவரை மொத்தம் 35 விமானங்கள் … Read more

பொருளாதார தடை உலகளாவிய மார்க்கெட்டை பாதிக்கும்- ரஷியா சொல்கிறது

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்தன. ஆனால், அமெரிக்கா குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வந்தது. இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள கிழக்கு பகுதியில் இரண்டு நகரங்களை தனிப்பகுதியாக ரஷியா அங்கீகரித்தது. மேலும், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள ரஷியாவுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வெளிநாட்டிற்கு ரஷியாவின் ராணுவத்தை அனுப்ப அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பது ஏறக்குறைய உறுதி … Read more

தமிழகத்தில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு- தமிழக அரசு

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. அதன்படி, தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். … Read more

புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இனி தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கட்டுபாடுகளை தளர்த்தி அறிவித்துள்ளது. இதுகுறித்து புவனேஷ்வர் நகராட்சி ஆணையர் சஞ்சய் சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல பக்தர்கள் கொரோனா தொற்று இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது அடையாளச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வழிபாட்டு தலங்களின் அதிகாரிகள் … Read more