உறவினர்களிடம் துணிச்சலாக சவால் விட்டு பா.ஜ.க. நிர்வாகியை கொன்ற 3 ரவுடிகள்- அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜனதா எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவரான பாலச்சந்தர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலச்சந்தருக்கு மர்ம நபர்களால் கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இதன் காரணமாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாலச்சந்தர் எங்கு சென்றாலும் உடன் சென்று வந்தனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பாலச்சந்தரின் பூர்வீகம் சிந்திரிப்பேட்டை என்பதால் அவர் அடிக்கடி அங்கு சென்று … Read more

விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு

புதுடெல்லி: சீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடத்தியது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசா முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று … Read more

கிண்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனறு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் அலுவலகம் முழுவதையும் அவர் பார்வையிட்டார்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு- பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

டெல்சாஸ்: அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் … Read more

சென்னையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை … Read more

வரதட்சணை கேட்டு மனைவி நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 28). இவர் முதிவேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜாப்பர்ஸ் விஷ்ணு பிரியா 24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு ஆண்டு வரை தம்பதியினர் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் அவரது தந்தை தேவராஜ் தாயார் குருவ ராணி ஆகியோர் வரதட்சணை கேட்டு விஷ்ணுபிரியாவை … Read more

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வடமாநில வாலிபர்கள்- மீனவ கிராம மக்கள் மறியல்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் … Read more

ஒடிசாவில் பஸ் கவிழ்ந்து 6 பயணிகள் பலி

புவனேஸ்வர்: மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பஸ் சென்றபோது கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா, இந்த ஆண்டு தொடக்கம் முதல் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு … Read more

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசாகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி … Read more