இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள்- பிரதமர் மோடி

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை … Read more

மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்- 36 மணிநேரம் இருளில் மூழ்கிய சண்டிகர்

சண்டிகர்: மின்வாரியத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் சண்டிகரில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பல இடங்கள் 2 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் பொதுமக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருளில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். … Read more

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே சிறையில் உள்ளார். சென்னை ராயபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் உள்பட 110 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருந்து ஜாமினில் விடுவிக்கக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் இன்று காலை மீண்டும் கைது … Read more

இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் சேதப்படுத்தும்- புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும், புதிய வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட வகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் தாக்கும் என்பது தொடர்பான புதிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு … Read more

நெதர்லாந்தில் பொதுமக்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்த மர்ம நபர்

நெதர்லாந்து: நெதர்லாந்து நாட்டு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மத்திய பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்ம நபர் துப்பாக்கியுடன் திடீரென புகுந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கடையில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மர்ம நபர் பிடித்து வைத்த பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படியும், … Read more

மு.க.ஸ்டாலின் வியூகங்களால் கொங்கு மண்டலத்தை வாரி சுருட்டிய தி.மு.க.

கோவை: சட்டமன்ற தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ எந்த தேர்தல் வந்தாலும் அனைவரின் கவனமும் திரும்புவது கொங்கு மண்டலத்தின் மீது தான். இந்த மாவட்டங்களில் கிடைக்கும் வெற்றி பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும். கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தது கொங்கு மண்டலத்தில் பெற்ற வாக்குகள் தான். 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக அமருவதற்கும் கொங்கு மண்டலமே காரணமாக இருந்தது. இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி எளிதாக … Read more

கச்சா எண்ணெய் விலை 100 டாலர்: பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 110 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்தவுடன் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உக்ரைனில் ரஷியாவால் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. அதாவது நேற்று கச்சா எண்ணெய் விலை 99.38 … Read more

5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:- இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் … Read more

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.   இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். … Read more