புலம்பெயர்ந்தவர்களை மீண்டும் அழைத்து வேலை கொடுப்போம்: மாயாவதி அறிவிப்பு

லக்னோ : உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, நேற்று பரைச் நகரில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மாயாவதி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி, மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தபோது சாதியவாதத்துடன் செயல்பட்டது. தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு எதிராக செயல்பட்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. கன்சிராம் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கவில்லை. மண்டல் கமிஷன் சிபாரிசுகளை கூட … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரைவில் சீனா திரும்ப நடவடிக்கை

பீஜிங் : சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கு பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு தாயகம் திரும்பினர். இந்த மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு சீனா இதுவரை விசா அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மட்டங்களிலும் இந்தியா தனது கவலையை வெளியிட்டபோதும், தொடர்ந்து மவுனம் காத்து வந்த சீனா தற்போது முதல் முறையாக நேர்மறையான … Read more

உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்

டோக்கியோ: உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக அதிபர் புதின் நேற்று அறிவித்தார். அங்கு ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்டதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், … Read more

உத்தர பிரதேசத்தில் 4ம் கட்ட தேர்தல் – 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

லக்னோ: 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு … Read more

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன் : இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- ஏப்ரல் 1-ந் தேதி முதல் குளிர்காலம் முடிந்து வைரஸ் பரவல் குறைவாகிறபோது, பொதுமக்களுக்கு இலவச, அறிகுறி மற்றும் அறிகுறியற்ற பரிசோதனையை நாங்கள் நிறுத்துவோம். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை … Read more

பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்

கொச்சி: விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் … Read more

உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா – சோனியாகாந்திக்கு தி.மு.க. அழைப்பு

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்1976-ம் ஆண்டு வரையிலான தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் எழுதியுள்ளார். முதல் பாகமாக வெளிவரும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் … Read more

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு ரத்து – ஆன்டனி பிளிங்கன் அறிவிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக கூறிய ரஷ்யா, தனது படைகளை தொடர்ந்து எல்லையில் நிலைநிறுத்தியது. உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா படையெடுக்கலாம் என அமெரிக்கா … Read more

இலங்கையுடனான டி20 தொடர் – சூர்யகுமார், தீபக் சாஹர் காயத்தால் விலகல்

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா ஒருநாள் தொடரி 3-0 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் முழுமையாக கைப்பற்றியது. இதற்கிடையே, இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் … Read more

உத்தரகாண்ட்டில் பயங்கர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள கன்காயின் தண்டா மற்றும் கட்டௌதி கிராமத்தைச் சேர்ந்த திருமண கோஷ்டி தனக்பூர் நகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டு தண்டா கக்னாய் கிராமத்திற்கு நேற்று இரவு 10 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுகிதாங்- டண்டமினார்  சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்து குறித்து அதிகாலை 3 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more