ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம். ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன. உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும். உக்ரைனுக்கு அதிகளவில் … Read more

உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், அந்தப் … Read more

242 பயணிகளுடன் உக்ரைனில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது

புதுடெல்லி: உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அந்நாட்டு எல்லையில் ரஷ்யா போர் படைகளை குவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  அழைப்பு விடுத்தார். இதற்கு உடனடியான எவ்வித பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை. ரஷ்யா, உக்ரைன் இடையே எந்நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் பல நாடுகள் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்களுடைய … Read more

பிரதமர் நரேந்திர மோடியுடன் டி.வி. நேரலையில் விவாதம் நடத்த தயார் – இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம், பயங்கரவாதம் என பல பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.  மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக ஆதரித்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு துணை போகிறது என இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.  இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. … Read more

பாரதிய ஜனதா கைப்பற்றிய மாநகராட்சி வார்டுகள்- முழு விவரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. தனித்து நின்ற பா.ஜனதாவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் 21 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதன் முழு விவரம் இதோ.. 1-கடலூர்-கடலூர்-வார்டு 28- ஜி சக்திவேல் 2-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 12- எம். சுனில் குமார் 3-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 13- வ. ஆச்சியம்மாள் 4-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 20- அ. ஆனேறோனைட்சினைடா 5-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 24- தி. ரோஸிட்டா … Read more

ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 2500 டன் கோதுமை அனுப்பி வைத்தது இந்தியா

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1-ம் தேதி 1.6 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது.   ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் … Read more

ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 8.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது.  இதனால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

சென்னை மாநகராட்சியில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு … Read more

பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு 10 வெகுமதி மதிப்பெண்: லக்னோ கல்லூரி அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழு கட்ட தேர்தலில் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நாளை 4-வது கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 7-ந்தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்பின் மார்ச் 10-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 100 சதவீத வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள கல்லூரி ஒன்று பெற்றோர்கள் வாக்களித்தால் 10 வெகுமதி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப குறைந்த கட்டணத்தில் விமான சேவை வேண்டும்- அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே உக்ரைன் நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி  இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் … Read more