ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடக்கம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருேக மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவில் வளாகத்தில் பக்தகண்ணப்பர் கொடியேற்றம் நடக்கிறது. அன்று உற்சவர் பக்தகண்ணப்பர் கோவிலின் மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 25-ந்தேதி மதியம் 1 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் … Read more

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, ‘புதினின் இந்த அறிவிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு மீதான தெளிவான தாக்குதல் ஆகும். பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் மெக்ரான் ரஷ்யாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினார். ரஷ்யா மீது ஐரோப்பா பொருளாதார தடைகளை விதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஒருதலைபட்சமான மீறல் ரஷ்யாவின் சர்வதேச உறவை … Read more

திண்டுக்கல் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகனும், தி.மு.க. சார்பில் தொழிலதிபரின் மகனுமான நாகராஜனும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த வார்டில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த வார்டில் இரவு முழுவதும் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வார்டில் இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்மோகன் … Read more

சாமியாரின் மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்- 5 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய திருப்பம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்தா சுவாமி. இவர் திருவனந்தபுரத்தில் ஒரு ஆசிரம் நடத்தி வந்தார். அப்போது அங்குள்ள பக்தை ஒருவர் வீட்டில் அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். அதன்படி சாமியார் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி அந்த பக்தை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சாமியார் கங்கேசானந்தா சுவாமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்

உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷியா மேற்கு நாடுகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. ரஷியா படைகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ள நிலையில், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள உக்ரைன் அரசுக்கு எதிராக செயல்படும் போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு தயாராகி வருகிறார். இதனிடையே உக்ரைனில் இருந்து ரஷியாவுக்கு தப்ப முயன்றதாக எல்லையில் ரஷிய ராணுவம் இரண்டு பேரை சுட்டுக்கொன்றது. உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை … Read more

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 11 மணி முன்னிலை நிலவரம் – 753 இடங்களில் திமுக வெற்றி

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 753 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 180 இடங்களில் அதிமுகவும், 162 இடங்களில் … Read more

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு- கேரளாவில் நாளை முதல் வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 69 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல கேரளாவில் உள்ள வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். … Read more

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்

ரியாத்: ஏமன் நாட்டில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளது. இப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதிஅரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலையம், எண்ணை நிறுவ னத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் பலியானார்கள். … Read more

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் 3 வார்டுகளில் தி.மு.க. வெற்றி

வானூர்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 145 பேர் போட்டியிட்டனர். மொத்த ஓட்டுகள்- 24,083 பதிவான வாக்குகள்-23,000. இன்று காலை 8 மணி அளவில் கோட்டக்குப்பம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 1 முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 1-வது வார்டு ஜெயமூர்த்தி (தி.மு.க.), 2-வது … Read more

சுயேட்சைகளை இழுக்க பா.ஜ.க, காங்கிரஸ் தீவிரம்

பானாஜி: 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்ட சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கோவாவில் இந்த தடவை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் சில பகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெரும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு ஆட்சி அமைப்பதில் சுயேட்சைகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கூறப்படுகிறது. கோவாவில் ஒரு கட்சி தனித்து ஆட்சி … Read more