உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடை – அமெரிக்கா நடவடிக்கை

நியூயார்க்: ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகரித்தார்.  இது அமைதி பேச்சுவார்த்தையை முறியடிக்கும் நடவடிக்கை என்று உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.  புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடைகளை அவர் விதித்துள்ளது. புதிய முதலீடு, … Read more

ரியோ ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் மோதினார். இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். இதையும் படியுங்கள்…புஜாரா, ரகானே மீண்டும் திரும்புவது கடினமே: கவாஸ்கர் சொல்கிறார்

உத்தர பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட தேர்தல் – பிரசாரம் நிறைவு

லக்னோ: 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் 624 … Read more

உக்ரைன் விவகாரம் – ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

ரஷ்யா, உக்ரைன்  இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் இனி டுனெட்ஸ், லுகன்ஸ் நகரங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இல்லாமல் தனி நகரங்களாக அழைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. … Read more

திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ர பாதம், அபிஷேகம் நடந்தது. காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவிலில் உள்ள கருவறை, கொடிமரம், பல்வேறு சன்னதிகள், கோவில் வளாகம், மேற்கூரை, தூண்கள், மாடங்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை, … Read more

பர்கினோ பசோ – தங்கச்சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் 59 பேர் பலி

ஒவ்கடங்கு: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. அந்நாட்டின் பாம்புளோரா என்ற இடத்தில் தங்கச்சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த தங்கச்சுரங்கத்தில் ஊழியர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது தங்கச்சுரங்கம் அருகே திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 59 பேர் பரிதாபமாக பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  விசாரணையில், அந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த … Read more

உலக சாம்பியனை தோற்கடித்த இளம் கிராண்ட் மாஸ்டர் – பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் பாராட்டு

புதுடெல்லி: ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், உலக … Read more

திருப்பதியில் ஆர்ஜித சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தலைமையிலான கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. அப்போது ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது என்றும் சேவை கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது … Read more

உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரித்தார் அதிபர் புதின்

மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, உக்ரைனுக்குச் சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீரிக்குமாறு அதிபர் … Read more