முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல்

சென்னை: தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத பா.ஜ.க. அரசு – சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெற உள்ள மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நாளை 4-ம் கட்ட பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: உ.பி. மக்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாத அரசை நீங்கள் பார்த்தீர்கள்.  இளைஞர்கள் படித்து … Read more

ஜெயக்குமார் டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.வினர் 3 பேர் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.    இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை இன்று இரவு போலீசார் … Read more

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதி கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்போது ராஜ்வார் பகுதியில் தப்பியோட முயன்ற பயங்கரவாதியை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.  விசாரணையில், அவர் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த உபைத் பஷீர் வானி என்பதும், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த என தெரிய வந்தது. அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதையும் படியுங்கள்…லக்கிம்பூர் வன்முறை- ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் உத்தரவுக்கு … Read more

ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம்- நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் தர்ணா

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியலும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து எனது தந்தையை போலீசார் … Read more

உ.பி.யில் சோகம்- கள்ளச் சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கரில் மதுபானக்கடையில் விற்பனை செய்யப்பட்ட நாட்டுச் சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாங்கி குடித்துள்ளனர். சாராயத்தை குடித்த சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பாதிக்கப்பட்ட 41 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.  சாராயத்தில் கலப்படம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தெருக்களில் இறங்கி … Read more

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.  அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம், அவரது கையை கட்டுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக … Read more

12-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி

புதுடெல்லி:  ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள ‘கார்பிவேக்ஸ்’ என்ற கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் நாட்டின் தடுப்பூசி இயக்கத்தில் இது சேர்க்கப்படவில்லை. இது புரோட்டின் ஆன்டிஜென் முறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும். தடுப்பூசியின் செயல் திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அதன்  ஒரு பகுதியாக கார்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளுடன், … Read more

உக்ரைனில் இருந்து நுழைய முயன்ற 5 பேரை சுட்டுக்கொன்றது ரஷிய ராணுவம்

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் ரஷியா போர் தொடுக்கும் என அமெரிக்கா கூறி வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் எல்லையில் போர் பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளன.  இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 5 பேரை சுட்டுக் கொன்றதாகவும், ரோஸ்டோவ் … Read more

கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.  அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம், அவரது கையை கட்டுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் … Read more