பஜ்ரங் தளம் நிர்வாகி படுகொலை- கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹர்ஷாவின் உடல் சிவமொகாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை … Read more

சென்னையில் காப்பீட்டுத் தொழிலாளர் தேசிய மாநாடு- மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்தார்

சென்னை: எல்.ஐ.சி. நிறுவனத்தில் இயங்கிவரும் காப்பீட்டுத் தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் (NOIW) பதினெட்டாவது அகில இந்திய மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த இரண்டு  தின மாநாட்டை, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினரான ஶ்ரீ ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தை சேர்ந்த சுவாமி சத்யபிரபானந்தா உரையாற்றினார். இந்த … Read more

லக்கிம்பூர் வன்முறை- ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் உத்தரவுக்கு எதிராக அப்பீல்

புதுடெல்லி: உத்தர  பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடை பெறவில்லை – தமிழக பாஜக புகார்

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியம் ஆகியவற்றை  தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் … Read more

மாட்டுத் தீவன ஊழல்: 5-வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1997 வரையில் 2 முறை முதல்- மந்திரியாக இருந்தார். அவர் முதல்-மந்திரியாக இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டு ஊழல் நடந்தது. இவ்வாறு 950 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. 1996-ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு … Read more

இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் விருப்பம்

லாகூர்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019 ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், இந்தியாவுடன், பாகிஸ்தான் மீண்டும் வர்த்தக உறவை தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தகம் காலத்தின் தேவை,  இரு நாடுகளுக்கும் இது நன்மை பயக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.  ஜவுளி, தொழில், … Read more

உக்ரைன், ரஷியா செல்லும் விமானங்கள் ரத்து- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன. உக்ரைன் – ரஷியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்கு வரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.

கேரளாவில் கட்சி தொண்டர் படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது மார்க்சிஸ்ட் புகார்

தலச்சேரி: கேரளாவின் கண்ணூர் மாவட்டம் நியூ மாஹே பகுதியில் நேற்றிரவு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  உயிரிழந்தவர் மீனவர் ஹரிதாஸ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்துள்ளனர்.பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஹரிதாஸ் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.  இரண்டு பைக்குகளில் வந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்திய போது ஹரிதாசின் சகோதரர் சூரன் அதை தடுக்க முயன்றார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.  அந்த கும்பல் … Read more

அன்று 3 பேர்… இன்று 2 பேர்… இரண்டாவது முறையாக வாக்களித்தவர் வேதனை

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்த ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த எழிலரசன் என்பவர் கூறுகையில், கடந்த 19-ந்தேதி சனிக்கிழமையும் நான் வாக்களித்தேன். இன்று இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்களிக்க வந்துள்ளேன். அன்று எங்கள் குடும்பத்தில் 3 பேர் வாக்களித்தோம். பணி காரணமாக எனது மகன் வெளியூருக்கு சென்று விட்டார். எனவே இன்று இரண்டு வாக்குகள் மட்டுமே … Read more

இந்திய கடற்படையை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

விசாகப்பட்டினம்: விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின ஒரு பகுதியாக கடற்படை மதிப்பாய்வு நிகழ்ச்சி  விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதற்காக விசாகப்பட்டினம் வந்த குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்தை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் ஹரிசரண், கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்.  #WATCH | The 12th edition of President’s Fleet Review underway in Visakhapatnam as part of Azadi Ka Amrit Mahotsav … Read more