‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்- கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று பரவலும் அதனையடுத்து வந்த ஊரடங்கு விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று. விக்ரம் பட பணிகள், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். கொரோனா பெருந்தொற்று … Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,051 ஆக குறைந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  16,051 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 3, 917 குறைவாகும்.   கடந்த டிசம்பர் 30-ந் தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 16,764 ஆக இருந்தது.  இந்நிலையில் 52 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 16,051 ஆக சரிந்துள்ளது. தினசரி கொரோனா … Read more

ஒரே நாளில் ரஷியாவில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா: 745 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ : ரஷியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த சில நாட்களாக ருத்ரதாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் 745 பேர் தொற்றில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்தனர். இதுவரையில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம்  5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று மாநில … Read more

வீட்டுக்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் ஆஷிப்பின் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டினார். … Read more

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்

நியூயார்க்: உக்ரைன் – ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைத்தனர்.  அதன்பின் அவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 5 வார்டுகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் வார்டு எண் … Read more

நவீன கால அவுரங்கசீப் அகிலேஷ் யாதவ் – சிவராஜ் சிங் சவுகான் தாக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே, அங்கு 3-ம் கட்டமாக நேற்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடந்தது.  இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் … Read more

ஐசிசி டி20 தரவரிசை – 6 ஆண்டுக்கு பிறகு முதல் இடம் பிடித்தது இந்தியா

துபாய்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.  முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என … Read more

ராணி எலிசபெத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை நேற்று உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் என பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவ அறிவுரைகளை தொடர்ந்து பெறும் ராணி எலிசபெத், முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் … Read more