சென்னையில் துணிகரம் – தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை: சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் தி.மு.க. நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார் என தெரிய வந்துள்ளது. தேர்தல் முன்பகையால் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்கள்…காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தது ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

விசாகப்பட்டினம் – கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி இன்று பார்வையிடுகிறார்

விசாகப்பட்டணம்: விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பார்வையிகிறார். இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஜனாதிபதியை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கவர்னர் ஹரிசரண், கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்.  இந்த அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60-க்கும்  மேற்பட்ட  கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்,  பங்கேற்கின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில் சுமார் … Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாளை மறுதினம் ரஷ்யா பயணம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் 23, 24-ம் தேதிகளில் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் புதினை இம்ரான்கான் சந்தித்துப் பேசுகிறார். கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தார். அதன்பிறகு இம்ரான்கான் செல்ல இருக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையே போர் … Read more

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு – 37 பதக்கங்கள் பெற்று நார்வே முதலிடம்

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கியது. 91 நாடுகள் பங்கேற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இந்நிலையில், ஒலிம்பில் போட்டியின் பதக்கப் பட்டியலில் 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. ஜெர்மனி 12 தங்கம், … Read more

உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க. ஓரங்கட்டப்படும்- அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  இந்நிலையில் கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன் மனைவியுடன் ஜஸ்வந்த் நகரில் ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தர பிரதேச தேர்தல் மூலம் பாஜக ஓரங்கட்டப்படும் என்றும், பாஜகவை விவசாயிகள் மன்னிக்க மட்டார்கள் என்றும் கூறினார். இதுவரை நடந்த 2 கட்ட … Read more

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு

லண்டன்: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாட்டு தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் என அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ராணி 2ம் எலிசபெத் தன்னை … Read more

கடைசி டி20 போட்டியிலும் அசத்தல்- வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 35 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து … Read more

நாக்பூரில் ரூ.40 கோடி கிரிப்டோகரன்சி மோசடி- மேலும் 7 பேர் கைது

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைத்து 2000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.40 கோடி அளவிற்கு மோசடி செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான நிஷித் வாஸ்னிக், அவரது மனைவி மற்றும் அவர்களின் 2 கூட்டாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இன்று  மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்மூலம், கிரிப்டோகரன்சி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், … Read more

31 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்படித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. படகுகள் அனைத்தும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்காக கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ்- வெஸ்ட் இண்டீசுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்கள் அதே உற்சாகத்துடன் ஆடினர். துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் களமிறங்கினர். ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் … Read more