கேரளாவில் நடந்த ஊர்வலத்தில் அவதூறு கோஷம்- சிறுவனை தோளில் சுமந்து சென்ற வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா நகரில் கடந்த 21-ந் தேதி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் சிறுவன் ஒருவனை தோளில் சுமந்தபடி சென்றார். அந்த சிறுவன் கோஷம் எழுப்பியபடி சென்றான். அதனை பேரணியில் பங்கேற்றவர்கள் வழிமொழிந்தபடி சென்றனர். இதில் சிறுவன் எழுப்பிய கோஷம் இருபிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இதில் ஈடுபட்டவர்கள் … Read more

நீட் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்ய நாளை மறுநாள் இரவு வரை வாய்ப்பு

சேலம்: இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (யு.ஜி)-2022 நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் … Read more

கேரளாவின் மலையோர மாவட்டங்களில் 28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கி உள்ளன. இதனால் ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் இன்று முதல் 28-ந் தேதி … Read more

சென்னையில் 4 கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்- திரளாக பங்கேற்க திருமாவளவன் அழைப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மோடி அரசைக் கண்டித்து சி.பி.ஐ. (எம்) சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்எல்-லிபரேசன்) ஆகிய கட்சிகளோடு விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைந்து இன்று முதல் 31ந் தேதி வரையிலான விழிப்புணர்வு பரப்பியக்கம் மேற் கொள்வது மற்றும் 26 மற்றும் 27-ந் தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் மீது அநியாயமாக விதிக்கப்பட்ட செஸ், சர்-சார்ஜ் என்ற கூடுதல் … Read more

புதிதாக 2,124 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்றைய பாதிப்பு 1,675 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. கேரளாவில் 468, டெல்லியில் 418, மகாராஷ்டிராவில் 338, அரியானாவில் 230, உத்தரபிரதேசத்தில் 124, கர்நாடகாவில் 118 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே … Read more

ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை- மீனவ பெண் எரித்து கொலை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படியுங்கள்…சென்னையில் துணிகரம் – பா.ஜ.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர்: குமாரசாமி

பெங்களூரு: மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சித்தராமையா சாதிகளுக்கு எதிராக பேசுகிறார். ஆனால் சாதி வாரியாக நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொள்கிறார். இது தான் அவரது மதசார்பற்ற கொள்கை. நான் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி நடத்தியபோது கூட மத பிரச்சினைகளுக்கு இடம் அளிக்கவில்லை. ஆனால் தற்போது என்ன ஆகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூகங்களை உடைக்க முயற்சிகள் … Read more

'குரங்கு காய்ச்சல்' கொரோனா போல பெருந்தொற்றாக பரவுமா?

உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம். காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் … Read more

குவாட் உச்சி மாநாடு நிறைவு – டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர். டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக … Read more

உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு

லண்டன்:  எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரியான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், 2வது முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டார்.  இந்நிலையில், டெட்ரோஸ் அதனோமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால், அவர் மீண்டும் இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார். அடுத்த 5 ஆண்டுக்கு அவர் தலைவராக செயல்படுவார்.  கொரோனா வைரஸ் தொற்றின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை டெட்ரோஸ் … Read more