லட்சுமி தேவி சைக்கிளிலோ, யானை மீதோ வருவதில்லை… தாமரையில் அமர்ந்தே வருகிறாள்: ராஜ்நாத் சிங் பிரசாரம்

அமேதி: உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி கடும் சவாலாக விளங்குகிறது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக பாஜக சார்பில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அவ்வகையில் இன்று அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லட்சுமி தேவியை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை மறைமுகமாக தாக்கினார்.  “லட்சுமி … Read more

பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சண்டிகர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.  மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட்டனர்.  காலை 11 மணி நிலவரப் படி 18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 1 மணி நிலவரப்படி … Read more

உ.பி.யில் விறுவிறுப்பாக நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

லக்னோ: 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ந் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை … Read more

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற தூதரகம் அறிவுரை

உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இன்று போர் தொடுக்கும், நாளை போர் தொடுக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்த வண்ணம் உள்ளது. நாட்டு மக்களையும் வெளியேற அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் தங்குயிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் … Read more

பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒசாமா போன்ற பயங்கரவாதியை ‘ஜி’ என அழைக்கிறார்கள்… சமாஜ்வாடி, காங்கிரஸ் மீது பிரதமர் கடும் தாக்கு

ஹர்டோய்: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கினார். இந்த கட்சிகள் பயங்கரவாத விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். “2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது. அதுபோன்ற பயங்கரவாதிகளை சில … Read more

பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய அணி: உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

மும்பை: தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அதன் ஒரு பகுதியாக அவர் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடாவை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் … Read more

கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு 2 டன் எடையில் பாயாசம் தயாரிக்க பிரமாண்ட வெண்கல உருளி காணிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் பாயாசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கோவில் சமையல் அறையில் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த பாயாசம் தயாரிப்பதற்காக பாலக்காட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் ராட்சத வார்ப்பு உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார். இந்த வார்ப்பு உருளி முழுக்க, முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டு உள்ளது. இதனை மன்னார் வெண்கல சிற்பிகள் வடிவமைத்தனர். இவர்கள் பல்வேறு கோவில்களுக்கு கொடி மரம் மற்றும் … Read more

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேகமாக பரவியது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பரவியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனிமைப்படுத்துதல் விதிகள் போன்ற மீதமுள்ள கொரோனா … Read more

சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. மதியம் … Read more