முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி – பாஜக தேசிய தலைவர் பேச்சு

சரவஸ்தி: உத்தர பிரதேச மாநிலம் சரவஸ்தி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஜன்தன் கணக்குகளை கேலி செய்தார்கள் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு இப்போது அதன் உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது எனவும் கூறினார். 3 மாதங்களுக்கு ஒருமுறை 10.50 கோடி விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வகுப்புவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கு … Read more

எல்லையின் நிலையே சீனாவுடனான உறவை தீர்மானிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

முனிச்: ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில்  இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  பேசியதாவது: பிரச்சனை என்னவென்றால், 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை. நாங்கள் ராணுவப் படைகளை கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். நாங்கள் அதை எல்லை என்று அழைக்கிறோம். ஆனால் அது … Read more

ரஜினிக்காக 30 ஆண்டுகளாக வாக்களிக்காத ரசிகர்- மனது மாறி உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்

புதுக்கோட்டை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வாக்குறுதியை அவர் அளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ‘அண்ணாத்த’ … Read more

தேசிய பாதுகாப்பில் அருணாச்சல பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், அருணாசல பிரதேசமும் 1987 ஆண்டு மாநில அந்தஸ்தை பெற்றன.   இரு மாநிலங்களிலும் இன்று மாநில தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: தேசிய முன்னேற்றத்திற்கு மிசோரமின் பங்களிப்புகளில் இந்தியா பெருமிதம் கொள்கிறது, மிசோரம் மக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும்நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேச மக்கள் அசாத்திய திறமை மற்றும் கடின … Read more

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் தலிபான் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச அங்கீகாரம் கிடைக்காததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உதவியது. கடந்த டிசம்பர் மாதம் மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.   அதன் பின் 2 முறை … Read more

சென்னையில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்குப்பதிவை 100 சதவீதமாக கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் முயற்சி எடுக்கிறது. ஆனால் எதிர் பார்த்த அளவுக்கு இன்னும் பலன் கிடைக்க வில்லை. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக … Read more

பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு

பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ஜலந்தரின் மிதாபூரில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். மற்றொரு அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு,  லூதியானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், மொஹாலியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.  காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி லூதியானாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது … Read more

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்

கீவ்: ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று  ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது … Read more

உத்தர பிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல் – 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

பரூக்காபாத்: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக  59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.  பரூக்காபாத் வாக்குச் சாவடியில் இன்று காலை தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர். ஹத்ராஸ், ஃபிரோசாபாத், எட்டா, கஸ்கஞ்ச், மெயின்புரி, ஃபரூகாபாத், கன்னோஜ், எடாவா, அவுரையா, கான்பூர் தேஹாத், கான்பூர் நகர், ஜலான், … Read more

பஞ்சாப் சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

ஜலந்தர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 23 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, கேப்டன் அமரீந்தர் சிங்  உள்பட மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ஆம் தேதி எண்ணப்படுகிறது. … Read more